தீபக் சாஹரின் இப்படி ஒரு ப்ரபோசலுக்கு காரணமே தல தோனி தானாம் – அவரே கூறிய தகவல் இதோ

Deepak-2
- Advertisement -

துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணி 134 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய பஞ்சாப் அணி ராகுலின் அதிரடி ஆட்டம் காரணமாக 6 விக்கெட் வித்தியாசத்தில் சி.எஸ்.கே வை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்றைய இந்த போட்டி ஒன் சைடு போட்டியாகவே இருந்தாலும் போட்டியின் முடிவில் தீபக் சாஹர் செய்த ஒரு சுவாரசியமான செயல் தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Deepak

- Advertisement -

அதன்படி நேற்றைய போட்டி முடிந்த பின்னர் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்த பிறகு தீபக் சாஹர் நேராக மைதானத்தில் அமர்ந்திருந்த தன் காதலியிடம் சென்று தனது காதலை வெளிப்படுத்தியது மட்டுமின்றி அவருக்கு மோதிரம் ஒன்றையும் அணிவித்தார். அப்போது அங்கு இருந்த தோனியின் மனைவி மற்றும் சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் ஆகியோர் ரசிகர்களுடன் இணைந்து கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதுமட்டுமின்றி அவர்கள் இருவருக்கும் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். இந்நிலையில் தீபக் சாஹரின் இந்த ப்ரொபோஸ் வீடியோ இணையத்தில் வைரலாகியது மட்டுமின்றி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. புதிதாக காதலில் இணைந்த இவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வரும் வேளையில் தோனியின் அறிவுரைப்படி தான் தீபக் சாஹர் இப்படி ப்ரொபோஸ் செய்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

deepak 1

அதன்படி வெளியான தகவலில் தீபக் சாஹர் பிளே ஆப் சுற்றின் போது தான் தனது காதலியிடம் ப்ரபோசல் செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னதாகவே உன்னுடைய காதலியிடம் ப்ரொபோஸ் செய்துவிடு என்று தோனி கொடுத்த அட்வைஸ் காரணமாகவே தற்போது அதிரடியாக தீபக் சாஹர் முன்கூட்டியே இந்த ப்ரொபோஸ்சலை செய்ததாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : மண்டியிட்டு காதலை வெளிப்படுத்திய தீபக் சாஹர். அவருடைய காதலி யார் தெரியுமா ? – முழுவிவரம் இதோ

மேலும் இந்த நிகழ்வு குறித்து பேசிவுள்ள தீபக் சாஹரின் தந்தை : தீபக் சாஹர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வீடு திரும்பிய உடன் அவர்கள் இருவருக்குமான திருமண தேதி முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement