இந்த தொடர் கேன்சல் ஆனா தோனி ரிட்டயர்டு ஆக வேண்டியதுதான் – விவரம் இதோ

Dhoni Dhawan
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான மகேந்திர சிங் தோனி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டிக்குப் பின்னர் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பவில்லை. ஆரம்ப காலத்தில் இவரே சிறிது ஓய்வு கேட்டாலும் அதன் பின்னர் வந்த தொடர்களில் இவருக்கு தொடர்ந்து இந்திய அணியின் தேர்வுக்குழுவினர்கள் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

Dhoni

- Advertisement -

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிசிசிஐ வெளியிட்ட ஒப்பந்த வீரர்களின் பட்டியலில் இருந்து அவரின் பெயர் நீக்கப்பட்டதால் அவர் மீண்டும் அணிக்கு திரும்புவது கடினம் என்று பல முன்னாள் வீரர்களும் கூறியுள்ளனர். ஆனால் தோனி தற்போது வரை அவரது ஓய்வு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்நிலையில் தோனி குறித்து சமீபத்தில் பேட்டியளித்த மைக்கல் ஹஸ்ஸி கூறுகையில் : தோனி எப்பொழுது இந்திய அணிக்கு திரும்பினாலும் அவரால் பழையபடி மீண்டும் சிறப்பாக விளையாட முடியும் என்றும் அவருக்கு வயது அதிகமானாலும் இன்னும் துடிப்புடனும், திறனுடனும் இருப்பதால் அவர் இந்திய அணிக்கு நிச்சயம் தேவை என்று கூறியிருந்தார்.

dhoni with pant

மேலும் தோனி இன்னும் சில ஆண்டுகள் விளையாடிவிட்டு அதன் பிறகு ஓய்வு பெறவேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால் இந்த ஆண்டு நடைபெற இருந்த ஐபிஎல் தொடரின் மூலம் மீண்டும் அணியில் இணையலாம் என்று இருந்த தோனியின் கனவு தற்போது கொரோனா வைரஸ் காரணமாக வீணாகி உள்ளது.

- Advertisement -

மேலும் இனி தோனி அணிக்கு திரும்ப ஒரே ஒரு வாய்ப்புதான் அது யாதெனில் t20 உலகக் கோப்பையில் அவர் நிச்சயம் இடம் பெற்றாக வேண்டும். அப்படி இல்லை என்றால் அவரால் மீண்டும் அணிக்கு திரும்பவே முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் நாளை தோனி தனது 39வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.

இதற்கு மேல் அவரால் விளையாட முடியாது என்ற காரணத்தாலும், இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும் என்ற கட்டாயத்தாளும் உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெறாமல் போனால் அவர் கட்டாய ஓய்வை அறிவித்து தான் ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தோனி விரைவில் ஓய்வு அறிவிப்பார் என்றும் பலரும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement