ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஐபிஎல் தொடர்பாக பல வீடியோக்கள் தொடர்ந்து அனைத்து அணிகள் தரப்பிலிருந்தும் தினமும் வெளியிடப்படுகின்றன.
இரண்டாண்டு தடைக்கு பின்னர் இந்தாண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிகள் மீண்டும் ஐபிஎல்-இல் விளையாடவுள்ளதால் இந்தாண்டு இன்னும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
Mahi maar rahe hai! @msdhoni #Thala #WhistlePodu ???????? pic.twitter.com/Ieo5vIQugW
— Chennai Super Kings (@ChennaiIPL) March 28, 2018
மொத்தம் 8அணிகள் பங்குபெறும் இந்த ஐபிஎல் தொடரானது 9 நகரங்களில் 51 நாட்கள் நடைபெறவுள்ளது.இந்த 11வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு போட்டியின் போதும் சுவாரஸ்யத்திற்கும், பரபரப்பிற்கும் கொஞ்சமும் பஞ்சமிருக்காது என அடித்து சொல்லலாம்.
இந்நிலையில் தான் தங்களின் ரசிகர்களை கவரும் விதமாக ஐபிஎல் தொடங்க இன்னும் சில தினங்களேயுள்ள நிலையில் பல தினமும் பல வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன.
அப்படி வெளியாகும் வீடியோக்கள் சில ஐபிஎல் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றது.