இப்போ மட்டும் குலு குலுன்னு இருக்குதா? கவுதம் கம்பீரை வம்பிற்கு இழுக்கும் தோனி ரசிகர்கள் – காரணம் போதோ

Gambhir-and-Dhoni
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரை கொல்கத்தா அணியானது கைப்பற்றி ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த தொடரில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக செயல்பட்ட கௌதம் கம்பீரின் செயல்பாடுகளுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

அதோடு கொல்கத்தா அணியில் குறிப்பிட்ட சில மாற்றங்களை கௌதம் கம்பீர் சரியாக செயல்படுத்தி உள்ளார் என்றும் பலரும் அவரை புகழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி சற்று ஒருபடி மேலே சென்று இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக அவரை நியமிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

ஏனெனில் இந்திய அணியின் பயிற்சிளான டிராவிட் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருடன் விடைபெறுகிறார். அதற்கு அடுத்து வெளிநாட்டு பயிற்சியாளர்களை விட இந்திய முன்னாள் வீரர்களையே பயிற்சியாளர் பதவிக்கு நியமிக்கும் திட்டத்துடன் பிசிசிஐ இருப்பதால் கம்பீருக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கௌதம் கம்பீரை தோனியின் ரசிகர்கள் சிலர் சமூக வலைதளத்தில் கடுமையாக சாடி வருகின்றனர். ஏனெனில் முன்பு எப்போதும் பேசும்போதெல்லாம் கௌதம் கம்பீர் தோனியை வம்பிற்கு இழுத்து அடிக்கடி விமர்சனத்தை சந்திப்பது வழக்கம். ஏற்கனவே கம்பீர் கூறுகையில் :

- Advertisement -

“தோனி மட்டுமே உலக கோப்பையை வாங்கி தந்தாரா”, “மற்றவர்கள் எல்லாம் அணியில் இல்லையா?” என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றி அடைந்ததற்கு காரணம் கௌதம் கம்பீர் தான் என்று பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : பும்ரா மாதிரி உலகில் யாருமே இல்ல.. அவரை மாதிரி மற்ற பவுலர்களும் அதை யூஸ் பண்ணனும்.. பிரட் லீ அட்வைஸ்

இவ்வேளையில் தோனியின் ரசிகர்கள் பலரும் இப்போது மட்டும் கொல்கத்தா அணி கௌதம் கம்பீரால் தான் வெற்றி பெற்றதா? அணியில் விளையாடிய வீரர்கள் எல்லாம் வெற்றிக்கு காரணம் இல்லையா? புகழ் வரும் போது மட்டும் உங்களுக்கு பிடிக்கிறதா? என்பது போன்ற விமர்சனங்களை சமூக வலைதளம் மூலம் முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement