1436 கிலோமீட்டர் நடந்து பார்க்க வந்த ரசிகர். இன்பப்பரிசு தந்து மகிழ்வித்த தல தோனி – என்ன செய்தார் தெரியுமா?

Dhoni-fan
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர் கூட்டம் பற்றி நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த அளவிற்கு ரசிகர்கள் தோனியின் மீது அன்பையும், பாசத்தையும் தொடர்ந்து அளித்து வருகின்றனர். தோனி களத்தில் இருக்கும் போது எத்தனையோ ரசிகர்கள் அவரது காலில் விழுந்து வணங்கியதை நாம் கண்டுள்ளோம். இந்நிலையில் அதை விட தீவிரமாக தோனியின் ரசிகர் ஒருவர் செய்துள்ள செயல் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

dhoni fan 2

- Advertisement -

ஹரியானாவின் கெடா என்கிற கிராமத்திலிருந்து ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி வரை நடைபயணமாக 1436 கிலோமீட்டர் தூரத்தை கடந்துள்ளார். ஏற்கனவே 3 மாதங்களுக்கு முன்னர் தோனி ஐபிஎல் தொடருக்கு ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் முன்னரே ராஞ்சி சென்றடைந்த அவர் தோனி இல்லை என்றதும் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தார்.

இந்நிலையில் தற்போது டி20 உலக கோப்பை அணியின் ஆலோசகராக இருந்து மீண்டும் இந்தியாவிற்கு திரும்பிய பின்னர் தற்போது இரண்டாவது முறை 1436 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு ராஞ்சி சென்றுள்ளார். இப்படி ஏற்கனவே ஒருமுறை ராஞ்சி சென்று தோனி இல்லை என்று ஊர் திரும்பிய இந்த ரசிகருக்கு இம்முறை தோனி வீட்டில் இருக்கும்போது மீண்டும் சென்றது அவருக்கு மிகப்பெரிய சர்பிரசை தந்துள்ளது.

dhoni fan 1

தனது ரசிகர் நடந்து வந்ததை கேள்விப்பட்ட தோனி அவரை தனது பண்ணை வீட்டுக்கு அழைத்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு பேசியுள்ளார். அதுமட்டுமின்றி அதோடு அவருக்கு வீடு திரும்புவதற்கான விமான டிக்கெட்டையும் போட்டு கொடுத்துள்ளார். அதோடு அவரிடம் நீண்ட நேரம் பேசிவிட்டு அவரை மகிழ்ச்சியுடன் வழி அனுப்பி உள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : மீண்டும் மீண்டும் ஒரே தவறு நடக்கிறது. அதனாலே தோல்வியை சந்திக்கிறோம் – டிம் சவூதி வருத்தம்

தோனி அவருக்கு கொடுத்த இந்த சர்ப்ரைஸ்ஸை எதிர்பாராத ரசிகரும் மகிழ்ச்சியுடன் திரும்பியுள்ளார். இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று நினைத்து இருந்ததாகவும் அதனை தோனி ஓய்வு பெற்றவுடன் மறந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். தோனியை நேரில் சந்தித்த பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement