மீண்டும் மீண்டும் ஒரே தவறு நடக்கிறது. அதனாலே தோல்வியை சந்திக்கிறோம் – டிம் சவூதி வருத்தம்

Southee-1

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று ராஞ்சி மைதானத்தில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை குவித்தது. அதனை தொடர்ந்து 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி சிறப்பான துவக்கத்தை கண்டது. முதல் விக்கெட்டுக்கு ரோகித் மற்றும் ராகுல் ஆகியோர் 117 ரன்கள் குவிக்க இறுதியாக 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 155 ரன்கள் குவித்து இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

pant

இந்திய அணி சார்பாக கேஎல் ராகுல் 65 ரன்களும், ரோகித் சர்மா 55 ரன்களும் குவித்தனர். இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஹர்ஷல் பட்டேல் நான்கு ஓவர்கள் பந்துவீசி 25 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவூதி கூறுகையில் :

- Advertisement -

இந்த வெற்றிக்கு இந்திய அணி முழு தகுதி உடைய அணிதான். முதல் ஆறு ஓவர்களுக்குப் பிறகு இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு எங்களது ரன் குவிப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் எந்த ஒரு இடத்திலும் அவர்கள் பவுலிங்கிலும் சரி, பேட்டிங் செய்யும் போதும் சரி எங்களுக்கு வாய்ப்பினை வழங்கவில்லை. இந்த மைதானம் இரண்டு அணிகள் விளையாடும் போதும் ஈரப்பதமாகவே இருந்தது. இரண்டாவது இன்னிங்சில் போது பனிப்பொழிவு மிகவும் அதிகமாக இருந்தது.

Southee

இந்த போட்டியில் டியூ ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்று ஏற்கனவே அறிந்திருந்தோம். இருப்பினும் இந்திய அணி இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டது. அடுத்த போட்டியில் மைதானத்தின் தன்மையை முன்கூட்டியே அறிந்து சிறப்பாக விளையாட முயற்சிப்போம் என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும் அவர் கூறிய இந்த கருத்தில் மீண்டும் மீண்டும் பிரச்சனை டியூவினால் தான் ஏற்படுகிறது என்பதை அவர் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஒரே போட்டியில் டி20 கிரிக்கெட்டின் மிக முக்கிய 3 சாதனைகளை படைத்த ரோஹித் சர்மா – லிஸ்ட் இதோ

ஏனெனில் நியூசிலாந்து அணியின் வீரர்கள் இரண்டாவதாக பீல்டிங் செய்யும் போது பந்து பனிப்பொழிவின் காரணமாக வழுக்கிச் சென்றது. அதுமட்டுமின்றி வீரர்களும் ஆங்காங்கே வழுக்கி வழுக்கி விழுந்ததையும் காண முடிந்தது. அது மட்டுமின்றி நினைத்த இடத்தில் பவுலர்களால் பந்து பந்துவீச முடியாததால் டியூ இருக்கும் காரணத்தினால் போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்திக்கிறோம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement