- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தோனி ரன்அவுட் ஆனதால் உயிரை விட்ட தோனியின் ரசிகர் – வைரல் செய்தி விவரம் இதோ

நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் கடைசி வரை இந்திய அணியின் வெற்றிக்காக போராடிய தோனி 50 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

பரபரப்பான இந்த இறுதிக்கட்டத்தில் தோனி இருந்திருந்தால் வெற்றி இலக்கை அடைந்து இருக்க முடியும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ரன் அவுட் தோனி அழுதபடி வெளியேறிய வீடியோ சமீபத்தில் வளைதளம் இணையதளங்களில் வெளியானது.

- Advertisement -

இந்நிலையில் தோனி அவுட்டானது தொடர்ந்து தோனியின் ரசிகர் ஒருவர் மாரடைப்பால் இறந்த சம்பவம் குறித்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது குறித்து நமக்கு கிடைத்த தகவலின்படி கொல்கத்தாவை சேர்ந்த சைக்கிள் கடை உரிமையாளர் ஸ்ரீகாந்த் மைதி(வயது 33) என்பவர் தனது செல்போனில் இந்தியா நியூசிலாந்து போட்டியை பார்த்தபடி அமர்ந்து இருந்ததாகவும் போட்டியின் இறுதி கட்டத்தை நெருங்கும் போது தோனி ரன்அவுட் ஆனதும் அவர் அதிர்ச்சியில் தரையில் மயங்கி விழுந்துள்ளார்.

உடனே அருகில் இருந்தவர்கள் அவரை கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் வழியிலேயே மாரடைப்பில் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தனது தலைவனுக்காக ஒரு ரசிகன் உயிரை விட்ட சம்பவம் தோனி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -
Published by