இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் ஐ.பி.எல் போட்டிகளில் களமிறங்கிய சென்னை அணி சிறப்பாக விளையாடி பிளே ஆப் சுற்றிற்கு இரண்டாவது அணியாக தகுதி பெற்றிருந்தது. சென்னை அணியின் இந்த வெற்றிக்கு காரணமே அந்த அணியின் கேப்டன் தோனியின் சிறப்பான தலைமை தான். தோனியின் அடுத்த உலக கோப்பை வரை கண்டிப்பாக நிலைப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், தனது ஓய்வு குறித்து மறைமுகமாக பேசியுள்ளார் தோனி.
நேற்று (மே 20) புனேவில் நடைபெற்ற பஞ்சாபிற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று, பஞ்சாப் அணியின் பிலே ஆப் கனவை சிதைத்தது சென்னை அணி.இந்த போட்டியின் முடிவில் பேசிய தோனி , ஹர்பஜன் மற்றும் சஹலை முன்னதாக களமிறங்கிய காரணத்தை கூறிவிட்டு பின்னர் கூறியதாவது.”சென்னை அணியின் உரிமையாளர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டார்கள். அவர்கள் நெருக்கமான வீரர்களை அணியில் இடம்பெற வைத்தார்கள்.
அவர்களுக்கு இந்த போட்டிக்கான வரலாறுகள் நன்றாக தெரிந்திருந்தனர். உங்களிடம் நல்ல அணி இல்லை என்றால் நீங்கள் வெற்றி பெறுவது கடினமாகி விடும். நாங்கள் அணியில் வீரர்களை சேர்த்துக் கொண்டே இருந்தோம், அவர்களும் நன்றாக விளையாடினார்கள்’ “ஆனால் இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்த இது கடினமாகி விடும், ஏனென்றால் இதில் உள்ள பெரும்பான்மையான வீரர்கள் 20 ஓவர்கள் போட்டியில் விளையாட பொருத்தமில்லாதவர்களாக போய்விடுவார்கள் (இதில் தனது ஒய்வு குறித்து மறைமுகமாக கூறியுள்ளாரே தோனி ??).
கடந்த 10 ஆண்டுகளை திரும்பி பார்த்தல் எங்கள் அணி சிறப்பாக வளையாடியுள்ளது. எங்கள் அணி ஒரு சில ஆண்டுகளில் இறுதி போட்டியில் செய்த தவறுகளை என்னால் நினைவு கூற முடிகிறது. இது இந்த போட்டியின் இயல்பு ஒரு பெரிய ஷாட்டோ, ஒரு ரன் அவுட்டோ ஆட்டத்தின் போக்கை மாற்றி விடும். அணைத்து அணிகளுமே பிளே ஆப் சுற்றிற்கு நுழைய பாடுபட்டனர். ஆனால் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் அணிக்கு மட்டும் ஒரு மறு வாய்ப்பு இருக்கிறது.” என்ற தெரிவித்துள்ளார்.