- Advertisement -
ஐ.பி.எல்

கடந்த 10 வருஷத்தில் தோனி முதன்முறையாக இந்த பயிற்சியை செய்தார் – சி.எஸ்.கே பிசியோ வெளியிட்ட ருசிகர தகவல்

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ரசிகர்களின் அமோகமான வரவேற்பினால் இந்த ஆண்டு பதின்மூன்றாவது சீசனாக ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி துவங்க இருந்தது. இந்நிலையில் இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்த தொடர் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இந்த தொடர் நடைபெறுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் தற்போது சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி இந்த தொடரில் தனது திறமையை நிரூபிப்பது மூலம் இந்திய அணியில் இணையும் வாய்ப்பை எதிர்பார்த்து இருந்தார். ஆனால் தற்போது ஐபிஎல் தொடரும் சந்தேகமாகி உள்ளதால் இந்திய அணியில் அவரது கேள்விக்குறியாகி உள்ளது என்பதே உண்மை.

- Advertisement -

எப்போதும் இல்லாமல் இந்த வருடம் தோனி முன்கூட்டியே சென்னை அணியின் பயிற்சி பயிற்சியில் இணைந்தார். வழக்கமாக ஐபிஎல் தொடருக்கு ஒரு வாரத்திற்கு முன் பயிற்சியில் இணையும் டோனி இம்முறை 27 நாட்களுக்கு முன்பே அதாவது மார்ச் 2-ஆம் தேதி சென்னையில் தனது பயிற்சியை துவங்கினார். ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் கடுமையாக பயிற்சி செய்த தோனி குறித்து தற்போது சென்னை அணியின் பிசியோதெரபிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில் கடந்த : கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக விக்கெட் கீப்பிங் பயிற்சியை மேற்கொண்டார். அதனை இந்த ஆண்டுதான் நாங்கள் நேராக பார்த்தோம். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் அவர் உள்ளார் என்பது எங்களுக்கு தெரிந்தது. இருப்பினும் அவர் திறமையை சோதிக்க இவ்வாறு பயிற்சி செய்தது ஒரு விதத்தில் எங்களுக்கு கவலை அளித்தாலும் அவருள் இருந்த வெறி எங்களுக்கு புரிந்தது.

- Advertisement -

மேலும் விக்கெட் கீப்பிங் செய்து அவர் பல நாட்கள் ஆகிவிட்டதால் அந்த பயிற்சியை மேற்கொண்டார் என்று நாங்கள் யோசித்துக் கொண்டோம். மேலும் பயிற்சியின் போது அவருக்கு காயம் ஏற்படுமோ என்ற கவலை இருந்தது இருப்பினும் தோனி சரியான ஷேப்பில் இன்னும் முழு உடல் தகுதியுடன் சிறப்பாக உள்ளார் .பேட்டிங்கிலும் கவனம் செலுத்திய தோனி பல மணி நேரங்கள் பேட்டிங் பயிற்சி செய்தார்.

அவரது பயிற்சியை காண சென்னை அரங்கம் நிறைந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக சென்னை அணிக்கு கேப்டனாக இருக்கும் தோனி மூன்று முறை இதுவரை கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார். மேலும் பலமுறை இறுதிப் போட்டிக்கும் கொண்டு சென்றுள்ளார். ஒருமுறைகூட பிளேஆப் சுற்றுக்கு சென்னை செல்லாமல் இருந்ததே கிடையாது என்ற அளவுக்கு சென்னை அணியை சிறப்பாக தோனி வழி நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by