MS Dhoni : தோனி இருக்கும்போது அம்பயர் தேவையில்லை. இந்த சம்பவம் அதற்கு நல்ல உதாரணம் – விவரம் இதோ

ஐ.பி.எல் தொடரின் 55 ஆவது போட்டி நேற்று மாலை 4 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், தோனி தலைமை

Dhoni
- Advertisement -

நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு காரணாமாக திகழ்ந்தவர் ராகுல். இந்நிலையில் ராகுல் 46 ரன்கள் எடுத்திருந்தபோது ஹர்பஜன் வீசிய பந்தில் ஸ்வீப் ஷாட் ஆடினார். அந்த பந்தினை எல்.பி என்று நினைத்து அம்பயரிடம் முறையிட்டார். ஆனால், அந்த பந்து கிளவுஸ்சில் பட்டது என்று தெளிவாக சொன்னார். மேலும், நான் ரிவீயு கேட்கவில்லை கிளவுஸ்சில் பட்டது என்று சொல்கிறேன் ஹிந்தியில் கூறினார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

தோனி இதுபோன்று சரியான முடிவினை எடுப்பது முதன்முறை இல்லை. ஸ்டம்பிற்கு முன்னால் இருக்கும் அம்பயர் மற்றும் பவுலருக்கு தெரியாத அந்த பந்தினை ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து தோனி சரியாக கணித்தது அனைவரையும் பிரமிக்கவைத்தது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல் தொடரின் 55 ஆவது போட்டி நேற்று மாலை 4 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், தோனி தலைமையிலான சென்னை அணியும் மோதின.

- Advertisement -

Dhoni

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக டுபிளிஸ்சிஸ் 96 ரன்களும், ரெய்னா 53 ரன்களும் குவித்தனர். இதனால் பஞ்சாப் அணிக்கு 171 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி.

Rahul

அதன்படி தெடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகப்பட்டமாக ராகுல் 36 பந்துகளில் 71 ரன்களையும், பூரான் 36 ரன்களையும் குவித்தனர். ஆட்டநாயகன் விருதினை ராகுல் பெற்றார்.

Advertisement