கிரிக்கெட் உலகை பொறுத்த வரை கேப்டன் கூல் என்றால் நம் நினைவில் முதலில் தோன்றும் பெயர் தோனி தான். தோனி விளையாடும் ஒரு சில ஆட்டத்தை பார்க்கும் நமக்கே நெஞ்சை பதறவைக்கும் அளவிற்கு டென்ஷன் ஏறிவிடும்.ஆனால், களத்தில் இருக்கும் தோனி சற்றும் பதறாமல் நிதனமாக நின்ற ஆடிவருவார். அதனால் தான் அவரை எல்லோரும் கேப்டன் கூல் என்று அழைக்கின்றனர்.
தோனியின் ஆட்டத்தையும் அவரின் அணுகுமுறையையும் கண்டு பல வீரர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். அதும் குறிப்பாக தோனி தற்போது விளையாடி வரும் ஐபிஎல் தொடர் மூலம் அவரது பெருமை மீண்டும் புதிப்பித்துள்ளது. சமீபத்தில் பாகிஸ்தானின் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரர் சாகித் அஃபிரிடி, கூலான கேப்டன் யார் என்ற கேள்விக்கு தோனி என்று பளீச் பதில் அளித்துள்ளார்.
சாகித் அஃபிரிடி, பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டு ஆட்டக்காரரான இவர் “பூம் பூம் அப்ரிடி” என்று அழைக்கப்படுபவர். பேட்டிங் மட்டும் பௌலிங்கிலும் அபாரமாக விளையாடக்கூடிய ஒரு சிறந்த வீரர். 1996 – 2017 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணியில் விளையாடிவந்தார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனடா நாட்டில் உள்ள டோரண்டோ என்ற பகுதியில் அஃபிரிடி கிரிக்கெட் கிளப் ஒன்றை தொடங்கியுள்ளார்.
Shahid Afridi:
Pakistan needs 75 in 5 overs, you are at the crease, any batting partner you'd want? "Abdul Razzaq"
If you could be anything else than a cricketer? "I'd be in the Army"
Coolest captain in World Cricket? "MS Dhoni"
Favourite Indian cricketer "Virat Kohli"— Saj Sadiq (@Saj_PakPassion) May 11, 2018
அஃபிரிடி அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றபோது அவரிடம் ஒரு சில கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது ,அதற்கு ஒரே வார்த்தையில் பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது அஃபிரிடியிடம் கிரிக்கெட் உலகில் கூலான கேப்டன் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு அஃபிரிடி சற்றும் யோசிக்காமல் தோனியின் பெயரை கூறியுள்ளார்.