கவலையே படாத. நீ மறுபடியும் பழைய பார்முக்கு வருவ. சீனியர் வீரருக்கு ஆறுதல் கூறிய – தல தோனி

Dhoni
Advertisement

இந்தியாவில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் 15-ஆவது ஐபிஎல் தொடரானது தற்போது பிளே ஆப் சுற்றினை நோக்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணி மிகப் பெரிய சரிவினை இத்தொடரின் ஆரம்பத்திலேயே சந்தித்தது. ஏனெனில் தோனிக்கு பதிலாக கேப்டன் பொறுப்பினை ஏற்ற ஜடேஜா முதல் 8 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றியை தேடிக் கொடுத்தார். இதன் காரணமாக தனது கேப்டன்சி அழுத்தம் காரணமாக தனிப்பட்ட ஆட்டம் பாதிக்கப்படுகிறது என்று கூறி மீண்டும் கேப்டன் பதவியை தோனியிடம் வழங்கினார்.

CSK Ms DHoni

பின்னர் தோனியின் தலைமை தற்போது சிறப்பாக செயல்படும் சென்னை அணி 3 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. அதன் காரணமாக தற்போது 11 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளி பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கிறது. இருப்பினும் இந்த தொடரில் இனி வரும் போட்டிகளில் அனைத்திலும் ஜெயித்தால் கூட சென்னை அணியால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாது என்பதன் காரணமாக தற்போது தற்போது இந்த தொடரில் இருந்து சென்னை அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம்.

- Advertisement -

இந்நிலையில் நேற்று டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின்போது சிஎஸ்கே அணியில் ஜடேஜா சேர்க்கப்படாதது பல்வேறு விவாதத்தை எழுப்பியது. ஆனால் ஜடேஜா பார்ம் அவுட் காரணமாகவும், விளையாடும் அளவிற்கு பிட்டாக இல்லை என்பதன் காரணமாகவும் அவர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை என்று கூறப்பட்டது.

Jadeja

இந்நிலையில் டீம் மீட்டிங்கின் போது ஜடேஜாவுக்கு தோனி ஆறுதல் கூறி உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி தற்போது பார்ம் அவுட்டாகி இருக்கும் ஜடேஜா நிச்சயம் சில போட்டிகளில் ஓய்வு எடுத்துக்கொண்டால் அதன் பின்னர் புத்துணர்ச்சி பெற்று மீண்டும் திரும்பி வருவார். எனவே அவருக்கு தோனி ஓய்வு கொடுத்ததாகவும் மேலும் மீண்டும் ஜடேஜா மீண்டும் பார்முக்கு வருவதற்கு நான் பொறுப்பு என்று தோனி அவரிடம் கூறி ஆறுதல் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடர் முழுவதுமே பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அடுத்தடுத்து 3 துறையிலும் சொதப்பி வரும் ஜடேஜா டி20 உலகக் கோப்பை நெருங்கி வருவதால் மிக கவலையில் உள்ளார். இந்நிலையில் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்றும் நிச்சயம் ஜடேஜாவை மீண்டும் பார்முக்கு திரும்ப வைக்க நான் இருக்கிறேன் என்று தோனி அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : இப்போ வருந்தி என்ன பயன், மும்பை செய்த அதே தவற பண்ணிட்டீங்க – சிஎஸ்கே மீதி கைஃப் அதிருப்தி

டெல்லி அணிக்காக நேற்று நடைபெற்ற போட்டியில் 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணியானது அடுத்து வரும் போட்டிகளில் நிச்சயம் வெற்றி பெற்றாலும் இந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது குறித்து யோசிக்கவில்லை என்றும் இனிவரும் போட்டிகளை சிறப்பாக விளையாடி நல்ல அணியை செட் செய்வோம் என்றும் தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement