இன்று ஹைதராபாத் – சென்னை பலபரிச்சை…தொடக்க இரு அதிரடி வீரர்கள் விளையாடுவது சந்தேகம் – யார் தெரியுமா ?

ஐ பி எல் சீசன் படு சுவாரசியமான கட்டத்தை நெருங்கி விட்டது .அனைத்து அணிகளுமே டாப் இடத்தை பிடிக்க போராடிவரும் நிலையில் இன்று மாலை சென்னை மற்றும் ஹைதராபாத் அணி மோத உள்ளது.இந்த சீசினில் இந்த இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணியாக இருந்து வருகிறது அதில் குறிப்பாக சொல்ல போனால் சென்னை அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களான தோனி, ரெய்னா, வாட்சன், பிலிங்ஸ் என்று பேட்ஸ்மேன்களுக்கு சென்னை அணியில் பஞ்சமே இல்லை.

அதிலும் வாட்ஸன் கடந்த போட்டியில் சதம் அடித்து கலக்கினார் மேலும் ஆரம்பத்தில் சற்று தடுமாறிய சின்ன தல தோனியும் பின்னர் அடுத்தடுத்து ஆடிய போட்டிகளில் பார்மிற்கு வந்து விட்டார்.மேலும் ஹைட்ராபாத் அணியை எடுத்துக் கொண்டால் பௌலிங்கிலும் பேட்டிங்கிலும் மிகுந்த பளுவாக இருக்கிறது. குறிப்பாக புவனேஸ்வரி குமார், ரஷீத் கான் ஸ்டான்லேக் போன்ற பந்து வீச்சாளர்கள் அந்த அணியின் மேலும் ஒரு பலம் என்று கூறலாம்.

- Advertisement -

ஆனால் கடந்த போட்டியின் போது காயமடைந்த தவானும்,அம்பத்தி ராயுடுவும் இந்த போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது.மேலும் ராயுடுவிற்கு பதிலாக ஓப்பனிங் பேட்ஸ்மேன் முரளி விஜய் இந்த ஆட்டத்தில் களம் இருக்குவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.ஹைத்ராபாத் அணி பொறுத்த வரை பௌலிங்கில் நெருக்கம் கொடுத்தது அந்த அணியின் சூழல் பந்து வீச்சாளர் ரஷீத் கான் தான் ஆனால் அவரது பந்தயும் பஞ்சாப் அணி கடந்த போட்டியில் தெறிக்கவிட்டனர்.அதிலும் குறிப்பாக பஞ்சாப் அணியின் கெய்ல் பந்துகளை விளாசி சதம் அடித்தார்.

bravo

எனவே சென்னை அணியில் சூழல் பந்துகளை லாவகமாக ஆடிவரும் சுரேஷ் ரெய்னா இன்று நடக்கும் போட்டியில் ரஷித் கானின் பந்தை பதம் பார்ப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த சீசனில் இந்த இரண்டு அணிகளுமே 4 ஆட்டங்கள் ஆடி 3 இல் வெற்றி பெற்று ஒன்றில் தோல்வி பெற்றும் இருக்கிறது. இதனால் சரிசமமான பலத்துடன் களமிறங்கும் இந்த இரு அணியின் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -
Advertisement