- Advertisement -
இந்திய கிரிக்கெட்

MS Dhoni : தனது கடைசி உலகக்கோப்பை தொடரில் ஆடும் தோனி அடிக்கடி பேட்டை மாற்ற இதுவே காரணம் – விவரம் இதோ

உலக கோப்பை தொடரின் எட்டாவது போட்டி நேற்று சவுத்தாம்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கும், டூப்ளிஸிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணிக்கும் இடையே நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கை விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை குவித்தது அதிகபட்சமாக கிறிஸ் மோரிஸ் 42 ரன்களும் கேப்டன் டூபிளிஸ்சிஸ் 38 ரன்களும் எடுத்தனர். இந்தியாவின் சார்பாக சாஹல் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

அதன்பின் 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 47.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக துவக்க வீரர் ரோகித் சர்மா 122 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் இந்திய அணி இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் தோனி தனது பேட்டை மாற்றி மாற்றி விளையாடியது தற்போது தோனி ரசிகர்களிடையே இணையத்தில் வைரலாகியுள்ளது. அதற்கான காரணமும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி 37 வயதாகிய தோனி தனது கடைசி உலக கோப்பை தொடரில் விளையாடி வருகிறார். அதனால் இந்த உலக கோப்பை தொடரை வென்று வெற்றியுடன் முடிக்க அவஆவலோடு உள்ளார்.

மேலும் அவரது பேட்டை மாற்ற காரணம் தற்போது வெளியாகியுள்ளது .அதன்படி தோனி தற்போது உபயோகிக்கும் பேட் சற்று கடினமான எடையினை உடையது. அதனால் அவர் 10 முதல் 20 கிராம் வரை குறைக்கப்பட்ட பேட்டை தற்போது பயன்படுத்தி வருகிறார். எனவே வெயிட் அதிகமாக இருக்கும் நேரத்தில் அவர் அதை விட எளிதாக இருக்கும் பேட்டை தற்போது பயன்படுத்தி வருவதால் அவர் அடிக்கடி பேட்டை மாற்றி வருகிறார் என்று விளக்கம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by