செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவிற்கு வராமல் ஏமாற்றிய தோனி – பிளான் கேன்சல் ஆக என்ன காரணம்?

Dhoni-Olympiad
- Advertisement -

சென்னையில் மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த ஜூலை மாதம் 28 ஆம் தேதி இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்த நிகழ்ச்சியில் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2000 வீரர்களுக்கு மேல் கலந்து கொண்டிருந்தனர். முதலமைச்சர் மு க ஸ்டாலின், பிரதமர் மோடி உட்பட பல தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்கள்.

Stalin Olympiad

- Advertisement -

இந்த நிகழ்ச்சியின் துவக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் பாரம்பரிய நடனங்கள், இளம் இசைக் கலைஞர் லிடியன் நடனங்கள், இசை நிகழ்ச்சி, தமிழர் வரலாறு குறித்து நடிகர் கமலஹாசன் குரலில் ஒலித்த தமிழ் மண் போன்ற பல விஷயங்கள் அரங்கேற்றப்பட்டு இருந்தது. அதுமட்டுமில்லாமல் பிரபலமான என்ஜாயி என் சாமி பாடல் கூட இந்த நிகழ்ச்சியில் பாடி இருந்தார்கள்.

இந்த துவக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்ததற்கு பலரும் விக்னேஷ் சிவனுக்கு பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்கள். இதனையடுத்து சிவனுக்கு சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் பல கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தது.

Stalin-and-Dhoni

இந்த நிகழ்ச்சியில் டிரம்ஸ் சிவமணி, வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா, கீபோர்ட் ஸ்டீபன் தேவசி, புல்லாங்குழல் இசை கலைஞர் நவீன் ஆகியோர் பல பாடல்களை கலைஞர் இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் கலைநிகழ்ச்சியில் லேசர் லைட் மூலமாக இசைக்கலைஞர்கள் அந்தரத்தில் பறந்தபடி சாகசம் செய்திருந்தார்கள். பார்வையாளர்களை சிலிர்க்க வைத்தது என்று சொல்லலாம்.

- Advertisement -

இந்நிலையில் இந்த செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தோனி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்றைய இந்த நிறைவு விழாவில் தோனி பங்கேற்கவில்லை. இப்படி ஏற்கனவே திட்டமிடப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தோனி பங்கேற்காததற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி தோனி தற்போது தனது தனிப்பட்ட பணிகளுக்காக அமெரிக்கா சென்று உள்ள வேளையில் அங்கிருந்து அவர் திரும்புவதற்கான புறப்பாடு நிகழ்வில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து அவரை தூக்குனது தப்பே இல்ல – சல்மான் பட் ஓபன்டாக்

இதன் காரணமாகவே அவர் திட்டமிட்டபடி இந்த செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பங்கேற்க முடியாமல் போனது. மேலும் அவரது நேற்றைய திட்டங்களும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தோனி வருவார் என்று பெரிய எதிர்பார்ப்பில் இருந்த தமிழக ரசிகர்கள் சற்று சோகம் அடைந்துள்ளனர் என்றே கூறலாம்.

Advertisement