வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற கிரிக்கெட் தொடரை முடித்துக் கொண்டு தற்போது நாடு திரும்பிய வேளையில் அடுத்ததாக ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் செப்டம்பர் 11-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியாக ஆகஸ்ட் 27-ஆம் தேதி இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோத இருக்கின்றன. அதற்கு அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாட இருக்கின்றன.

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ ஏற்கனவே தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டது. அதில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் காயம் காரணமாக தேர்வு செய்யப்படவில்லை என்றும் இந்திய அணியின் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஸ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
மேலும் கூடுதல் வேகப்பந்து வீச்சாளர்களாக தீபக்சாகர் ஸ்டான்ட் பை வீரராக அணியில் நீடிக்கிறார். இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி நீக்கப்பட்டது பல்வேறு விமர்சனங்களை எழுப்பி உள்ளது. ஏனெனில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்திய அவர் ஆசிய கோப்பை தொடர் மற்றும் உலகக்கோப்பை அணியில் விளையாட வேண்டும் என்பதே அனைவரது கருத்தாகவும் உள்ளது.

இந்நிலையில் முகமது ஷமியை ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் இருந்து நீக்கியது சரிதான் என பாகிஸ்தானின் முன்னாள் வீரரான சல்மான் பட் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணி ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் முகமது ஷமிக்கு ஓய்வு கொடுத்தது சரியான ஒன்று.
ஏனெனில் கடந்த முறை அவர் ஐக்கிய அமீரகத்தில் விளையாடும் போது பெரிய அளவில் அவரால் தாக்கத்தை புதுப்பந்தில் ஏற்படுத்த முடியவில்லை. எனவே அவருக்கு பதிலாக அங்கு சிறப்பாக செயல்படும் வீரரை தேர்வு செய்ய வேண்டியது அவசியம். ஏற்கனவே பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ளனர்.
இதையும் படிங்க : அக்கறையுடன் திட்டுவார், அவருக்கு பரிசு கொடுத்தேன் – மறைந்த அம்பயர் ருடியை பற்றி நெஞ்சை தொடும் பின்னணியை பகிரும் சேவாக்
எனவே அந்த இடங்களில் இந்திய அணி நல்ல பவுலரை தேர்வு செய்ய வேண்டும். என்னை பொறுத்தவரை முகமது ஷமி அணியில் இடம் பெறாததால் இந்திய அணிக்கு பெரிய பாதிப்பு இல்லை என சல்மான் பட் கூறியது குறிப்பிடத்தக்கது.



