2000 கருப்புநிற கடக்நாத் கோழிகளை தனது பண்ணை வீட்டிற்கு வாங்கிய தல தோனி – எதற்கு தெரியுமா?

Dhoni-1
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தற்போது ஐபிஎல் தொடர் போட்டிகளில் மட்டும் பங்கேற்று விளையாடி வருகிறார். அந்தவகையில் தற்போது நடைபெற்று வரும் 15 ஆவது ஐ.பி.எல் தொடரில் தோனி பங்கேற்று விளையாடி வருகிறார். அதனை தவிர்த்து தான் ஓய்வு எடுத்துக்கொள்ளும் நேரத்தை முழுவதுமாக தனது பண்ணை வீட்டில் செலவிடும் தோனி தற்போது இயற்கையான முறையில் விவசாயம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

MS Dhoni vs MI

- Advertisement -

அப்படி தோனி இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விடயங்கள் அனைத்தையும் நாம் பல செய்திகளில் பார்த்திருப்போம். அந்த வகையில் தோனியின் ராஞ்சி பண்ணை வீட்டில் ஏற்கனவே விவசாயம் மூலம் பல்வேறு காய்கறிகளை விளைவித்து வரும் அவர் அதனை பொதுமக்களுக்கும் கொடுத்து அவ்வகையான விவசாயத்தை மேம்படுத்த ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் தோனியின் கோரிக்கையின் பேரில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த அதிக புரதம் நிறைந்த கடக்நாத் இனத்தைச் சேர்ந்த 2000 கோழிக்குஞ்சுகளை ராஞ்சி பண்ணை வீட்டுக்கு அனுப்பி உள்ளதாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த கூட்டுறவு நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்ற கோழிகளைக் காட்டிலும் கடக்நாத் வகையான கோழியின இறைச்சியில் சத்து அதிகம் என்பதும் அந்தக் கோழிகள் இடும் முட்டைகளில் புரதம் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இந்த வகையான கோழிகள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

kadaknath

இந்நிலையில் இந்த வகையான கோழிகளை வளர்க்க அவர் 2000 கடக்நாத் கோழிக்குஞ்சுகளை தற்போது ஆர்டர் செய்து தனது பண்ணை வீட்டுக்காக வாங்கியுள்ளார். இதுகுறித்து அந்த கடக்நாத் கோழிகளைக் வழங்கும் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் : மஹேந்திர சிங் தோனி போன்ற பிரபலமான ஒரு நபர் கடக்நாத் கோழிகளின் மீது ஆர்வம் காட்டி அதனை வாங்குவது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று.

- Advertisement -

இந்த வகையான கோழிக்குஞ்சுகளை ஆன்லைன் மூலமாக மக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் இது பெரிய அளவில் பயனளிக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஏற்கனவே விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட தோனி தற்போது கடக்நாத் வகையான கோழிகளை வாங்கி தனது பண்ணை வீட்டில் அதையும் வளர்க்க உள்ளார்.

இதையும் படிங்க : இந்திய வீரரை மிரட்டிய பத்திரிகையாளருக்கு 2 ஆண்டுகள் தடை விதித்து பிசிசிஐ அதிரடி – ரசிகர்கள் பாராட்டு

அதற்கான காரணம் யாதெனில் இயற்கை விவசாயத்தின் மீதான ஆர்வத்தை தொடர்ந்து தற்போது இந்த அரியவகை கோழிப் பண்ணையம் அமைத்து அவ்வகையான கோழிகளை உற்பத்தி செய்யவே பிரத்யேகமாக அவர் அதனை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement