இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியில் இடம் பிடிப்பது சற்று சிரமமாக உள்ளது. மேலும் அவரது ஓய்வு குறித்த பேச்சும் தொடர்ந்து இருந்து வரும் நிலையில் தோனி ஓய்வு குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
While Media was speculating and the rumours spreading around, #Dhoni was busy launching helicopters in a golf course yesterday. ????️⛳#PicOfTheDay #MSDhoni @msdhoni pic.twitter.com/FIarK2d2on
— MS Dhoni Fans Official (@msdfansofficial) September 13, 2019
இந்நிலையில் நேற்று திடீரென சமூகவலைதளங்களில் தோனி தனது ஓய்வு முடிவை அறிவிக்கப் போவதாக புரளி உருவானது. மேலும் அந்த புரளியானது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி காட்டுத்தீயாய் மாறியது. இந்நிலையில் தற்போது தோனி ஓய்வு அறிவிப்பு குறித்த எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை என்று ஏற்கனவே தேர்வுக்குழு தலைவர் தெளிவுபடுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தோனி தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றால் அவர் அமெரிக்காவில் கோல்ப் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். அதனை தோனியின் ரசிகர்கள் புகைப்படமாக இணைய தளத்தில் பதிவிட்டு தோனி ஓய்வு குறித்த தவறான செய்தியை பரப்ப வேண்டாம் என்று பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



