டோனியை முதலில் சந்தித்த இடம்..! ஹோட்டலில் வேலை செய்த சாக்ஷி.! காதல் மலர்ந்து இப்படித்தான்.!

ms-Dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி தனது 37-வது பிறந்தநாளை இன்று (ஜூலை 7 ) கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு தோனியின் மனைவி சாக்ஷி இங்கிலாந்து சென்று கேக் வெட்டி கொண்டாடினார். இந்நிலையில் தோனி வாழ்வில் நடந்த காதல் விடயங்களை குறித்து கொஞ்சம் கண்டு விட்டு செல்லலாம்.

Dhoni

2004 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற தோனி. பின்னர் ஒரு சில ஆண்டுகளில் கிரிக்கெட் உலகில் பிரபலமாக, தீபிகா படுகோன், லஷ்மி ராய் போன்ற நடிகைகளுடன் தோனி காதல் வலையில் விழுந்ததாக அடிக்கடி கிசு கிசுக்கள் கிளம்பின. ஆனால், எப்போதும் போல தோனி இது குறித்து கேள்வி கேட்கப்பட்ட போதெல்லம் மர்ம புன்னகையை தான் பதிலாக அளித்தார்.

ஆனால், தோனி உண்மையாக காதல் வலையில் விழுந்தது ஷாக்ஷியிடம் தான். தோனிக்கு, ஷாக்ஷிக்கும் காதல் மலர தொடங்கியது 2007 ஆம் ஆண்டு தான். ஆனால், இவர்கள் இருவரும் சிறு வயதில் ஒன்றாக படித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெறும் உள்ள போட்டியில் பங்கேர்பதற்காக அங்குள்ள தாஜ் ஹோட்டலில் இந்திய அணி தங்கியது.

அப்போது அந்த ஹோட்டலில் கேட்டரிங் படித்துகொண்டே வேலைப்பார்த்து கொண்டிருந்துள்ளார் சாக்ஷி. தன்னுடன் படித்த தோனியை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்று சாக்ஷி ,தோனியின் மேலாளராக இருந்த தனது நண்பர் யுதாஜித் உதவியுடன் தோனியை சந்தித்துள்ளார். முதலில் தோனிக்கு , ஷாக்ஷியை அடையாளம் தெரியவில்லை. பின்னர் பள்ளி காலம் தோனிக்கு ஞாபகம் வர இருவரும் இயல்பாக பழகியுள்ளனர்.

Dhoni sakshi

பின்னர், தோனி தனது மேலாளர் மூலம் ஷாக்ஷியின் போன் நம்பரை வாங்கி தனது காதலுக்கு தண்ணீர் ஊற்றியுள்ளளார். பின்னர் இருவருக்கும் இருந்த நட்பு 2008 ஆம் ஆண்டு காதலாக மலர்ந்தது. சில ஆண்டுகளில் காதல் விவகாரம் இரு வீட்டிலும் தெரியவர 2010 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது, பின்னர் இவர்களின் தேவதையாக 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி ஜிவா பிறந்தார்.