- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தனது மனைவியுடன் சென்னை வந்திருக்கும் தல தோனிக்கு உற்சாக வரவேறு கொடுத்த ரசிகர்கள் – எதற்கு தெரியுமா?

இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வெற்றியைப் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் வரலாற்றில் ஐந்தாவது முறையாக சென்னை அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் தன் மீது வைத்திருக்கும் அன்பிற்காகவும், பாசத்திற்காகவும் மேலும் ஒரு ஐ.பி.எல் சீசனில் தான் விளையாட இருப்பதாகவும் உறுதி செய்தார்.

அதனை தொடர்ந்து நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் முழங்கால் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் மும்பை சென்று அதற்கான அறுவை சிகிச்சையும் மேற்கொண்டார். பின்னர் மும்பையில் இருந்து ராஞ்சிக்கு சென்ற தோனி கடந்த சில வாரங்களாகவே ஓய்வில் இருந்து வந்தார்.

- Advertisement -

கடந்த சில தினங்களுக்கும் முன்னர் தனது 42-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய அவர் தற்போது மீண்டும் அவர் சென்னைக்கு தனது மனைவியுடன் வந்துள்ளார். அப்படி சென்னை வரும்போது விமான நிலையத்தில் ரசிகர்கள் பலரும் தோனியின் பெயரை கோஷமிட்டு, மலர் தூவி உற்சாக வரவேற்பினை அளித்திருந்தனர். அதற்கு காரணம் யாதெனில் : தோனி என்டர்டைன்மென்ட் என்கிற நிறுவனத்தின் மூலம் மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி சிங் ஆகியோர் இணைந்து தங்களது முதல் தமிழ் படத்தை தயாரித்துள்ளனர்.

எல்.ஜி.எம் (Lets Get Married) என்கிற இந்த திரைப்படமானது காதல் கதை அம்சம் கொண்ட படமாக உருவாக்கியுள்ளது. இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே புகழ் இவானா, நதியா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள வேளையில் இந்த படத்திற்கான போஸ்டர்கள் மற்றும் டீசர்கள் ஆகியவை வெளியாகி ரசிகர் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்திருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற இருப்பதன் காரணமாகவே நேற்று தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி ஆகியோர் சென்னை வந்துள்ளனர்.

இதையும் படிங்க : IND vs WI : எல்லாரும் ரிட்டையர் ஆகிட்டாங்க ஆனா நாம – ராகுல் டிராவிட்டுடன் 12 வருட மலரும் நினைவை பகிர்ந்த விராட் கோலி

இன்று சென்னையில் நடைபெறவுள்ள இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர்கள் கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் ஏற்கனவே தோனி என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பிலும் அவர்கள் உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by