ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட உள்ள தோனி. எப்போது தெரியுமா ? – தோனியின் நண்பர்கள் வெளியிட்ட தகவல்

Dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரரான தோனி இந்திய கிரிக்கெட் அணிக்காக மூன்று வகையான ஐசிசி கோப்பைகளையும் அதாவது 50 ஓவர் உலகக் கோப்பை, 20 ஓவர் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை என அனைத்தையும் வென்று கொடுத்துள்ளார்.

Dhoni-1

- Advertisement -

இவரது தலைமையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வந்தது. அதன் பிறகு தனது கேப்டன்ஷிப் போய் விட்டு விலகிய தோனி இந்திய அணியில் ஒரு வீரராக விளையாடி வருகிறார். இதற்கிடையில் வயது மூப்பின் காரணமாக இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையுடன் கிரிக்கெட்டிற்கு விடைகொடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் தோனி இன்னும் ஓய்வு குறித்து எந்த ஒரு தகவலையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

மேலும் ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு ஓய்வு அறிவிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் கடந்த பல மாதங்களாகவே தோனிக்கு எந்த ஒரு வகையிலும் இந்தியன் இடம் கிடைக்கவில்லை. மேலும் தற்போது இந்திய அணியின் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.

Dhoni

இதனால் தற்போது துவங்க இருந்த 13 ஆவது ஐபிஎல் தொடரை பயன்படுத்தி அணியில் இடம்பிடிக்க தோனி திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது. ஆனால் இப்போது ஐபிஎல் போட்டி ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்தும் இந்த போட்டி நடைபெறுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

- Advertisement -

இதனால் தோனி மீண்டும் கிரிக்கெட்டிற்கு வருவது கேள்விக்குறியாகியுள்ளது. ஐபிஎல் தொடர் மட்டும் ரத்தானால் மீண்டும் தோனி இடம்பிடிக்க வாய்ப்பே இல்லை என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனால் தோனியின் சிறுவயது பயிற்சியாளர் பானர்ஜி ஐபிஎல்லில் விளையாட வில்லை என்றாலும் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி தோனி தனது நெருங்கிய நண்பர்களிடம் தான் ஓய்வு பெற நேரம் வந்துவிட்டதாக கூறி உள்ளார்.

dhoni

ஆனால் இதுகுறித்து பிசிசிஐ இடம் இன்னும் தெரிவிக்கவில்லை என்றாலும் அதற்கான நேரம் வரும் போது விரைவில் ஓய்வை அறிவிக்கப்போவதாகவும் அவர்கள் நண்பர் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பிசிசிஐ தோனிக்கு சரியான வழியனுப்பு போட்டியை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆனால் அதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளது என்றும் தற்போது பேசப்பட்டு வருகிறது. தோனி அவர்கள் நண்பர்களிடம் கூறிய தகவலின் படி விரைவில் அவர் ஓய்வினை அறிவிப்பார் என்று தெரியவந்துள்ளது. இதனால் தோனியின் ரசிகர்கள் தற்போது சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement