செய்த தவறை மீண்டும் மீண்டும் தெரிந்தே செய்யும் தல தோனி – கடுப்பான ரசிகர்கள்

Dhoni
- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிய சிக்கலை சந்தித்து வருகிறது. முதல் போட்டியில் பலம் வாய்ந்த மும்பை அணியை சென்னை அணி வீழ்த்தி இருந்தாலும் அடுத்தடுத்த மூன்று போட்டிகளில் ஹாட்ரிக் தோல்வி அடைந்து தற்போது புள்ளிப் பட்டியலில் அதலபாதாளத்தில் உள்ளது. இந்த தொடர் தோல்விகள் காரணமாக பார்க்கப்படுவது யாதெனில் முக்கிய வீரரான சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் ஆகியோரது விலகல் தான் என்று கூறப்படுகிறது.

CSK-1

- Advertisement -

மேலும் இடையில் இரண்டு போட்டிகளில் விளையாடாத ராயுடுவும் அணியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டார். இந்நிலையில் ராயுடு மற்றும் பிராவோ ஆகியோர் கடந்த போட்டியில் மீண்டும் அணியில் இணைந்து அணிக்கு பலமாக பார்க்கப்பட்டது. இருப்பினும் கடந்த போட்டியில் சென்னை அணிக்கு தோல்வியே மிஞ்சியது. இந்நிலையில் தற்போது ஐந்தாவது போட்டியாக இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை துபாய் மைதானத்தில் சந்திக்கிறது.

இந்நிலையில் ஏற்கனவே கடந்த போட்டியின் தோல்விக்குப் பிறகு சென்னை அணியில் கேதார் ஜாதவ் அணியில் இடம் பெறக்கூடாது என்றும் அவருக்கு பதிலாக இளம் வீரர்கள் யாருக்காவது வாய்ப்பு அளிக்கலாம் என்று சி.எஸ்.கே ரசிகர்கள் கேதார் ஜாதாவிற்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து இருந்தனர்.

Jadhav 1

மேலும் கடைசியாக ஜாதவ் விளையாடிய 16 போட்டிகளில் ஒரு முறை கூட 30 ரன்களை தாண்ட வில்லை என்ற காரணத்தையும் கூறி அவரை அணியில் சேர்க்க வேண்டாம் என்று வெளிப்படையாக கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது துவங்கியுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் மீண்டும் ஜாதவை தோனி அணியில் இணைத்துள்ளது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

Jadhav

ஏனெனில் ஏற்கனவே சென்னை அணியின் மிடில் ஆர்டர் அவ்வளவாக வலுவில்லை என்றும் துவக்கத்திலும் அதிரடியாக ரன்கள் வராத பட்சத்தில் எவ்வாறு இனி வரும் போட்டிகளில் சிஎஸ்கே எதிர்கொள்ள போகிறது என்றும் தோனியின் முடிவின் மீது சிறு ஏமாற்றத்துடன் தங்களது கருத்துக்களை ரசிகர்கள் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement