குவாலிபயர் 1 : டாஸ் வென்ற தோனி பீல்டிங் தேர்வு. ஆனாலும் ஒரு தப்பு பண்ணிட்டாரு – என்ன இப்படி பண்ணிடீங்க ?

dhoni 1
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் முதலாவது குவாலிபயர் போட்டி தற்போது துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், இரண்டாம் இடத்தில் இருக்கும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பதன் காரணமாக இரு அணிகளுமே வெற்றிபெற கடுமையாக போராடும் என்று தெரிகிறது.

cskvsdc
cskvsdc

இந்நிலையில் சற்று முன்னர் நடைபெற்ற டாஸிற்க்கு பிறகு டாசில் வெற்றி பெற்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்தார். மேலும் இந்த போட்டி குறித்து அவர் கூறுகையில் : நாங்கள் எப்போதெல்லாம் விளையாடி இருக்கிறோமோ அப்போதெல்லாம் சிறப்பாகவே விளையாடி இருக்கிறோம். நிச்சயம் எங்கள் அணியின் வீரர்கள் சிறப்பாக இந்த போட்டியில் செயல்படுவார்கள்.

- Advertisement -

துவக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல முமெண்ட் கிடைக்கும் என்பதால் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்திருக்கிறோம். நிச்சயம் இரண்டாம் பாதியில் பேட்டிங் செய்ய இந்த மைதானம் ஒத்துழைக்கும் என்பதன் காரணமாகவே நான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தேன் என்று தோனி கூறியது மட்டுமின்றி கடந்த போட்டியில் விளையாடிய அதே அணிதான் விளையாடுகிறது என்று அறிவித்தார்.

CSK

தோனியின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் சிஎஸ்கே அணிக்காக ஆரம்ப காலத்திலிருந்து விளையாடி வரும் சுரேஷ் ரெய்னா பிளே ஆப் போன்ற முக்கிய போட்டிகளில் எப்போதுமே வழக்கமாக சிறப்பாக விளையாடக் கூடியவர். இதுவரை ஒரு முறை கூட சென்னை அணி பிளே ஆப் செல்லும்போது ரெய்னா அணியில் விளையாடாமல் இருந்தது இல்லை, அதே போன்று ரன் குவிக்காமல் இருந்ததும் கிடையாது.

- Advertisement -

Raina

இந்நிலையில் இன்றைய போட்டியில் ரெய்னாவை வெளியில் அமர வைத்துள்ளது தவறான முடிவாக உள்ளது என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பை : சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை தெரியுமா ? – விவரம் இதோ

1) ருதுராஜ் கெய்க்வாட், 2) டூபிளெஸ்ஸிஸ், 3) மொயின் அலி, 4) உத்தப்பா, 5) அம்பத்தி ராயுடு, 6) தோனி, 7) ரவீந்திர ஜடேஜா, 8) டுவைன் பிராவோ, 9) ஷர்துல் தாகூர், 10) தீபக் சாஹர், 11) ஹேசல்வுட்

Advertisement