ரோஹித்துடன் இன்று இவர்தான் ஓப்பனிங் செய்யப்போகிறார் – கோலி ஓபன் டாக்

Kohli

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று பகலிரவு போட்டியாக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

Rahul

பயிற்சி முடிந்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்திய கிரிக்கெட் அணியில் தவான் காயத்திலிருந்து மீண்டு வந்ததால் தற்போது ராகுல் ரோஹித் சர்மா என மூன்று துவக்க வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதனால் யார் ரோஹித்துடன் ஒருநாள் போட்டிகளில் துவக்க வீரராக களமிறங்கவுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் தவான் மற்றும் ராகுல் ஆகியோரில் யாரை ஓரங்கட்ட போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த கோலி : ஒரு வீரர் சிறந்த பார்மில் உள்ளது அணிக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். இதனால் எது சிறந்த கூட்டணியோ அந்த கூட்டணியை தேர்வு செய்ய இந்த தொடர் உதவும்.

rohith 1

என்னைப்பொருத்தவரை ரோகித், தவான் மற்றும் ராகுல் என அனைவரும் தற்போது சிறப்பாக ஆடி வருகின்றனர். மூவரும் அணியில் இருக்க வாய்ப்புள்ளது. மேலும் களத்தில் எப்படி வெளிப்பாடு உள்ளது என்பதை பொறுத்து துவக்க ஜோடி இடம்பெறும் என்று கோலி கூறினார். கோலி கூறியபடி பார்த்தால் ரோஹித்துடன் இன்று மீண்டும் தவான் இறங்கவே அதிக வாய்ப்புள்ளது. ராகுல் மீண்டும் மிடில் ஆர்டருக்கு தள்ளப்படுவார் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -