கங்குலியின் மிகப்பெரிய சாதனையை இன்று முறியடிக்க காத்திருக்கும் ஷிகார் தவான் – என்ன சாதனை தெரியுமா ?

Dhawan
- Advertisement -

ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி இன்று இலங்கை அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் முழுவதும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள தவான் எவ்வாறு விளையாடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் உள்ளது. இந்நிலையில் இடதுகை துவக்க ஆட்டக்காரரான தவான் இந்த முதலாவது போட்டியிலேயே சவுரவ் கங்குலியின் பெரிய ரெக்கார்டு ஒன்றினை தகர்க்க வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

நிச்சயம் அவர் இன்றைய போட்டியில் அந்த சாதனை மைல்கல்லை கடப்பார் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கேப்டனாக தனது முதல் வெற்றியையும் அவர் இன்று பதிவு செய்ய காத்திருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணிக்காக 2010ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 142 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தவான் 5977 ரன்களை குவித்துள்ளார்.

இன்றைய போட்டியில் அவர் மேலும் 23 ரன்களை எடுக்கும் பட்சத்தில் ஒருநாள் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களை கடந்த 10வது இந்திய பேட்ஸ்மேன்க என்ற சாதனையை படைப்பார். அதுமட்டுமின்றி இந்த 6 ஆயிரம் ரன்களை விரைவாக குவித்த நான்காவது வீரர் என்ற சாதனையையும் படைப்பார்.

சர்வதேச அளவில் 6000 ரன்களை வேகமாக எடுத்த வீரராக ஹசிம் ஆம்லா 123 இன்னிங்ஸ்களில் முதல் இடத்திலும், விராட் கோலி 136 இன்னிங்ஸ்களில் அடித்து இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 139 இன்னிங்ஸ்களில் 6000 ரன்கள் அடித்து மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இந்நிலையில் இன்று தவான் 23 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் 140 இன்னிங்ஸ்களில் 6 ஆயிரம் ரன்களை எடுத்த நான்காவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

Dhawan 1

அதுமட்டுமின்றி இடதுகை ஆட்டக்காரராக இந்திய அணி சார்பாக 6000 ரன்களை வேகமாக கடந்த வீரராக சவுரவ் கங்குலி 147 இன்னிங்ஸ்களில் 6,000 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். அவரது இந்த சாதனையை இன்று தவான் 140 வது இன்னிங்சில் முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது. நிச்சயம் இந்த சாதனையை இன்றைய போட்டியில் தவான் கடப்பார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement