பாண்டியாவை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய தவான் – நடவடிக்கை எடுக்கவிருக்கும் பி.சி.சி.ஐ

- Advertisement -

ஹர்டிக் பாண்டியா, தவான், புவனேஸ்வர் குமார், தீபக் சஹர் ஆகியோர் காயம் காரணமாக நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை. மேலும் இந்தியாவில் இருந்த அவர்கள் காயத்தில் இருந்து மீண்ட நிலையில் டி.ஒய் பாட்டீல் தொடரில் விளையாடி வந்தனர்.

Pandya 1

- Advertisement -

ஹார்திக் பாண்டியா, தவான் ஆகியோர் ரிலையன்ஸ் அணிக்காக அந்த தொடரில் பங்கேற்று விளையாடினார்கள். அந்த தொடரில் ஒரு போட்டியில் ஹாட்ரிக் பாண்டியா 37 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். மேலும் அந்த தொடரில் ஆடிய ஹர்டிக் பாண்டியா உடன் தற்போது தவானும் சேர்ந்து ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அதன்படி உள்நாட்டில் நடைபெறும் லீக் போட்டிகளின் போது பிசிசிஐ லோகோவை வீரர்கள் தங்களது ஹெல்மெட்டில் பயன்படுத்தக்கூடாது என்பது பிசிசிஐ-யின் ஒரு விதியாகும். அதனால் உள்நாட்டு போட்டிகளில் ஆடும் போது பிசிசிஐ லோகோ ஹெல்மெட்டில் இடம் பெற்றிருந்தால் அதை மறைத்து விட்டு அதன் மீது ஸ்டிக்கர் ஒட்டி வீரர்கள் விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.

Dhawan

ஆனால் டி.ஒய் பாட்டீல் தொடரில் ஹர்டிக் பண்டியா ஆடிய நிலையில் அதே தவறை செய்துள்ளார். ஒரு போட்டியில் ஹெல்மெட்டில் ஸ்டிக்கரை ஒட்டாத பாண்டியா அடுத்த போட்டியில் தனது தவறை திருத்திக் கொண்டார்.

- Advertisement -

ஆனால் அதேபோன்றுதான் பிசிசிஐ லோகோ கொண்ட ஹெல்மெட் உடன் ஆடிய தவானும் அந்த சர்ச்சையில் சிக்கி உள்ளார். தற்போது பிசிசிஐ விதிமுறை மீறிய குற்றம் என்பதால் தவான் மற்றும் பாண்டியா மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

pandya

ஏற்கனவே இதே குற்றம் ஒருமுறை ராகுல் மீதும் எழுந்தது. ஆனால் ராகுலின் கிரிக்கெட் எதிர்காலத்தை மனதில் கொண்டு பி.சி.சி.ஐ அவருக்கு மன்னிப்பு அளித்து அதுகுறித்த முழு விழிப்புணர்வும் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement