கடைசி போட்டியில் தோல்வி அடைந்து தொடரை இழக்க இதுவே காரணம் – கேப்டன் தவான் வருத்தம்

Dhawan
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி டி20 போட்டியானது நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்திலிருந்தது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி துவக்க வீரர்களாக களமிறங்கிய தவான் மற்றும் கெய்க்வாட் ஆகியோர் பேட்டிங்கை துவங்கினர். ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக முதல் ஓவரின் 4-வது பந்தில் தவான் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

INDvsSL

- Advertisement -

அதன் பின்னர் வந்த யாருமே பெரிய அளவில் ரன்களை குவிக்க வில்லை. குறிப்பாக சொல்லப்போனால் பேட்ஸ்மேன்களில் கெய்க்வாட் ஒருவர் மட்டுமே 14 ரன்கள் குவித்தார். அவரைத் தவிர மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் 10 ரன்களை கூட அடிக்கவில்லை. பவுலர்களான புவனேஸ்வர் குமார் 16 ரன்களும், குல்தீப் யாதவ் 23 ரன்களும் குவித்தனர். இதன் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 81 ரன்கள் மட்டுமே குவித்தது.

அதன் பின்னர் 82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி ஆனது 14.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது மட்டுமின்றி தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் தவான் கூறுகையில் : இந்தப் போட்டியில் எங்களது நிலைமை சற்று கடினமாக இருந்தது.

hasaranga

இந்தப் போட்டியிலும் நாங்கள் வெற்றி பெறவே நினைத்தோம். இந்த போட்டியில் வீரர்கள் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. கடைசி இரண்டு போட்டிகளாக இளம் வீரர்கள் நல்ல போராட்டத்தை காண்பித்து வருகின்றனர். இருப்பினும் கடந்த இரண்டு போட்டிகளாக ஏற்பட்ட தோல்வியிலிருந்து நிறையக் கற்றுக்கொண்டோம். இன்றைய போட்டியில் எங்களது தோல்விக்கு முக்கிய காரணமாக பேட்டிங் ஃபெயிலியர் காரணமாக அமைந்தது. துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்ததால் அணியின் மீது அழுத்தம் ஏற்பட்டது.

Varun

அதன் பிறகு நாங்கள் தொடர்ந்து விக்கெட்களை இழந்து விட்டோம். இலங்கை அணி சிறப்பாக பௌலிங் செய்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் எங்களுக்கு அழுத்தம் அதிகரித்து எங்களால் ரன்களை குவிக்க முடியாமல் போனது. மொத்தத்தில் பேட்டிங்கில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே இந்த தோல்வி நிகழ்ந்ததாக கேப்டன் தவான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement