மும்பை அணியை பார்த்தாலே புரட்டி எடுக்கும் நட்சத்திர வீரர் – ரெய்னாவை முந்திய புதிய சூப்பர் சாதனை

Shikar Dhawan
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 13-ஆம் தேதி நடைபெற்ற 23-ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் நேருக்கு நேர் மோதின. புனேயில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய பஞ்சாப்க்கு தொடக்க வீரர்கள் கேப்டன் மயங்க் அகர்வால் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இணைந்து முதல் ஓவரில் இருந்தே அதிரடியை கையிலெடுத்தனர். ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட அனைத்து மும்பை பவுலர்களையும் பவர்பிளே ஓவர்களில் பட்டை கிளப்பிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தது.

dhawan

- Advertisement -

இந்த ஜோடியில் 32 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 52 ரன்கள் எடுத்திருந்தபோது கேப்டன் மயங்க் அகர்வால் அவுட்டாக அடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோ 12 ரன்களிலும் நடையை காட்டினார். போதாகுறைக்கு அடுத்து களமிறங்கிய லியம் லிவிங்ஸ்டனை 2 ரன்களில் ஜஸ்பிரித் பும்ரா க்ளீன் போல்டாக்கினார்.

அசத்திய தவான்:
இருப்பினும் மறுபுறம் பட்டையை கிளப்பும் பேட்டிங் செய்த ஷிகர் தவான் 50 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 70 ரன்கள் எடுத்து அவுட்டானர். கடைசி நேரத்தில் இளம் வீரர்கள் ஷாருக்கான் 15 (6) ரன்களும் ஜிதேஷ் சர்மா 15 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 30* ரன்களும் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் பஞ்சாப் 198/5 ரன்களை எடுத்தது. மும்பை சார்பில் அதிகபட்சமாக பேசில் தம்பி 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

Dewald Brevis

அதை தொடர்ந்து 199 என்ற இலக்கை துரத்திய மும்பைக்கு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 17 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 28 ரன்கள் எடுத்து திடீரென ஆட்டமிழக்க அவருடன் களமிறங்கி தடுமாறிக் கொண்டிருந்த இசான் கிசான் 3 (6) ரன்களில் நடையை கட்டினார். இதனால் 32/2 என சரிந்த மும்பையை அடுத்து களமிறங்கிய இளம் வீரர்கள் தேவால்டு ப்ரேவிஸ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் அதிரடியாக 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு மீட்டெடுத்த போது 25 பந்துகளில் அதிரடியாக 4 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 49 ரன்கள் எடுத்த பிரேவிஸ் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

சொதப்பிய மும்பை:
அடுத்த சில ஓவர்களிலேயே 20 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 36 ரன்கள் எடுத்த திலக் வர்மா ஆட்டமிழக்க அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் பொல்லார்ட் 10 (11) ரன்களில் ரன் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதனால் மீண்டும் சரிந்த மும்பையை நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் 30 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட 43 ரன்கள் எடுத்து வெற்றிக்காக போராடிய போதிலும் கடைசி நேரத்தில் அவுட்டாகி ஏமாற்றினார்.

MI vs PBKS

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 186/9 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை போராடி தோல்வி அடைந்தது. இதன் காரணமாக 12 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற பஞ்சாப் இதுவரை பங்கேற்ற இந்த போட்டியில் 3-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியது. பஞ்சாப் சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய ஓடின் ஸ்மித் 4 விக்கெட்டுகளும் ரபடா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

- Advertisement -

மும்பையை புரட்டும் தவான்:
மறுபுறம் பந்துவீச்சில் சொதப்பி பேட்டிங்கிலும் கோட்டைவிட்ட மும்பை ஏற்கனவே தனது முதல் 4 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை பதிவு செய்திருந்த நிலையில் இந்தப் போட்டியிலும் தோல்வி அடைந்ததால் இதுவரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்ய முடியாமல் தொடர்ந்து 5 தோல்விளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடமான 10-வது இடத்தில் திண்டாடுகிறது. ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என்ற சாதனை படைத்த மும்பை இப்படி அதலபாதாளத்தில் திண்டாடுவது அந்த அணி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

1. முன்னதாக இந்த போட்டியில் 70 ரன்களை விளாசிய ஷிகர் தவான் ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ள மும்பைக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற சுரேஷ் ரெய்னாவின் சாதனை உடைத்து புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல் இதோ:
1. ஷிகர் தவான் : 871 ரன்கள் (27 இன்னிங்ஸ்)
2. சுரேஷ் ரெய்னா : 850 ரன்கள் (36 இன்னிங்ஸ்)
3. விராட் கோலி : 827 ரன்கள் (31 இன்னிங்ஸ்)

- Advertisement -

2. இது மட்டுமல்லாமல் இப்போட்டியில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்களை தெறிக்கவிட்ட அவர் ஐபிஎல் வரலாற்றில் 800 பவுண்டரிகளை (சிக்ஸர் + பவுண்டரி) அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சரித்திரத்தையும் படைத்தார். அந்தப் பட்டியல் இதோ:
1. ஷிகர் தவான் : 803*
2. விராட் கோலி : 768
3. கிறிஸ் கெயில் : 762

இதையும் படிங்க : நாங்கள் செய்த 2 தவறே தோல்விக்கு காரணம். 5 ஆவது போட்டியிலும் தோல்வி அடைந்தது குறித்து – ரோஹித் வருத்தம்

3. இத்துடன் இப்போட்டியில் அரைசதம் அடித்த அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக அரைசதம் அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார். ஷிகர் தவான் விராட் கோலி ஆகிய இருவருமே இதுவரை 47 அரை சதங்கள் அடித்துள்ளார்கள்.

Advertisement