நாங்கள் செய்த 2 தவறே தோல்விக்கு காரணம். 5 ஆவது போட்டியிலும் தோல்வி அடைந்தது குறித்து – ரோஹித் வருத்தம்

rohith
- Advertisement -

புனே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 23-வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மாயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின, இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் குவித்தது. பின்னர் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 186 ரன்களை மட்டுமே குவித்தது.

pbks

- Advertisement -

இதன் காரணமாக 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய மும்பை அணி ஏற்கனவே நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள காரணத்தினால் தற்போது 5வது தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சேஸிங்கை துவங்கிய போதே 32 ரன்களுக்கு இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.

இருப்பினும் அடுத்ததாக வந்த பிரீவிஸ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் சற்று நம்பிக்கை தரும் வகையில் விளையாடினர். இருப்பினும் பிரீவிஸ் 49 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் சூர்யகுமார் யாதவ் கொடுத்த தவறான அழைப்பு காரணமாக திலக் வர்மா ரன் அவுட் செய்யப்பட்டார்.

pollard 1

அதனை தொடர்ந்து பொல்லார்டும் 10 ரன்களில் சூரியகுமார் யாதவின் தவறாக அழைப்பு காரணமாக ரன் அவுட் ஆக இறுதியில் மும்பை அணி சரிவை சந்தித்து 186 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த தொடர் தோல்விகளுக்குப் பின்னர் பேட்டியளித்த மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் :

- Advertisement -

நாங்கள் இந்த போட்டியில் நன்றாக விளையாடினோம் என்று நினைத்தோம். ஆனால் வெற்றிக்கு அருகில் வந்து அதனை கோட்டை விட்டதில் மிகவும் வருத்தம். இந்த போட்டியில் அந்த 2 ரன்அவுட் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. வித்தியாசமான சிந்தனையுடன் இந்த போட்டிகளில் விளையாட முயற்சித்தோம். ஆனால் அதனை சரியாக செய்யாமல் தோற்று விட்டோம்.

இதையும் படிங்க : கிங் கோலியிடம் அந்த பழைய பவர் போய்டுச்சு, இனி ரன் மழை பொழிவதை பார்க்க முடியாது – முன்னாள் வீரர் கருத்து

நாங்கள் நன்றாக விளையாடவில்லை. சில சூழ்நிலைகளை புரிந்து கொண்டு அதற்கேற்றாற் போன்று விளையாட வேண்டும். இந்த ஆடுகளத்தில் 198 என்பது எட்டக்கூடிய இலக்கு தான் என்று நினைத்தேன். ஆனால் இறுதியில் அது முடியாமல் போனது வருத்தம். மீண்டும் நாங்கள் நன்றாக தயாராகி வர வேண்டியது அவசியம் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement