கிங் கோலியிடம் அந்த பழைய பவர் போய்டுச்சு, இனி ரன் மழை பொழிவதை பார்க்க முடியாது – முன்னாள் வீரர் கருத்து

Virat
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட பப் டு பிளேஸிஸ் தலைமையில் புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு வரும் அந்த அணி இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 3 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் நல்ல நிலையில் உள்ளது. அந்த அணிக்கு கடந்த 2013 – 2021 வரை கேப்டனாக தம்மால் முடிந்தவரை முழுமூச்சுடன் பேட்டிங்கில் மலைபோல ரன்களை குவித்து கேப்டன்ஷிப் செய்த போதிலும் கோப்பையை வாங்கி தர முடியாததால் விமர்சனத்திற்கு உள்ளாகி வந்த நட்சத்திரம் விராட் கோலி கடந்த வருடம் இந்திய கேப்டன் பதவியிலிருந்து விலகிய போது பெங்களூரு கேப்டன் பதவிக்கும் முழுக்கு போட்டார்.

Virat Faf Du Plessis

- Advertisement -

கடந்த 2016 போன்ற காலக்கட்டங்களில் கேப்டனாக இருந்தபோதிலும் அதிரடி சரவெடியாக ரன் மழை பொழிந்த அவர் கடந்த 2019-க்கு பின் டெஸ்ட், ஒருநாள், டி20 அல்லது ஐபிஎல் என எந்த வகையான கிரிக்கெட்டிலும் ஒரு சதம் அடிக்க முடியாமல் திண்டாடி வருகிறார். தொடர்ச்சியாக இந்தியா மற்றும் ஐபிஎல் தொடரில் கேப்டன்ஷிப் செய்வதால் அந்த அழுத்தம் தனது பேட்டிங்கை பாதித்ததாக உணர்ந்த அவர் கேப்டன் பதவியில் இருந்து படிப்படியாக விலகி தற்போது மீண்டும் சாதாரண வீரராக விளையாடத் தொடங்கி உள்ளார்.

தடுமாறும் விராட் கோலி:
அதிலும் கடந்த ஜனவரி மாதம் முதல் சுதந்திரப் பறவையாக மாறிய போதிலும் இதுவரை பெரிய ரன்கள் அடிக்க முடியாமல் அவர் தடுமாறி வருகிறார். குறிப்பாக தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் 2012-க்கு பின் முதல் முறையாக சாதாரண வீரராக விளையாட தொடங்கியுள்ள அவர் இதுவரை பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை. பஞ்சாப்க்கு எதிரான முதல் போட்டியில் 41* (29) ரன்களை அதிரடியாக எடுத்த அவர் அதன்பின் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 12 (7) ரன்கள் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 5 (6) ரன்கள் என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

Virat Kohli vs CSK

அதன்பின் மும்பைக்கு எதிரான 4-வது போட்டியில் 48 (36) ரன்கள் எடுத்த அவர் நேற்று சென்னைக்கு எதிராக நடந்த 5-வது போட்டியில் 217 என்ற பெரிய இலக்கை துரத்திய போது வெறும் 1 (4) ரன்னில் அவுட்டானது அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே பின்னடைவை கொடுத்து இறுதியில் தோல்வியை பரிசளித்தது. மோசமான பார்ம் அவுட் எனக் கூறமுடியாது என்றாலும் இதுபோல சமீப காலங்களாக அவர் அடிக்கும் ரன்கள் என்பது அவரின் தரத்திற்கு ஈடில்லை என்று கூறினால் மிகையாகாது.

- Advertisement -

பழைய பவர் இல்ல:
இந்நிலையில் விராட் கோலியிடம் இருந்த அந்த பழைய தெறிக்கவிடும் பவர் தற்போது இல்லை என்று முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி கணிசமான ரன்களை அடித்து வருகிறார் என்றாலும் அவர் அடிக்கும் சிக்சர்கள் எவ்வளவு தூரத்திற்கு செல்கிறது என்று நான் கவனித்து வருகிறேன். அதாவது மைதானத்தின் மேல் தளத்திற்கு செல்கிறதா அல்லது 2-வது தளத்திற்கு செல்கிறதா என்று பார்க்கும் போது அவரின் சிக்ஸர்கள் வெறும் பவுண்டரியின் எல்லையை மட்டுமே கடக்கிறது. அதன் காரணமாகவே கடந்த வருடத்திலிருந்து விராட் கோலியின் பவர் ஆட்டம் சற்று குறைந்து போய்விட்டது என்று நான் கூறி வருகிறேன்” என கூறினார்.

Sanjay

அவர் கூறுவது போல ஒரு காலத்தில் எதிரணி பவுலர்களை புரட்டி எடுத்து மெகா சிக்ஸர்களை பறக்கவிடும் பேட்ஸ்மேனாக இருந்த விராட் கோலியின் ஆட்டத்தில் சமீப காலங்களாக அதிரடி தென்படுவதில்லை. அதிலும் அவரின் சிக்ஸர்கள் எவ்வளவு தூரத்திற்கு செல்கிறது என பார்க்கும்போது அது பவுண்டரி எல்லையை மட்டும் கடப்பதை பார்த்தால் அவரிடம் இருந்த பழைய பவர் குறைந்துவிட்டதாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

- Advertisement -

கடந்த 4 – 5 வருடங்களுக்கு முன்பு 20-களின் கடைசி கட்டத்தில் இருந்த விராட் கோலி தற்போது 33 வயதை கடந்துள்ளார். மேலும் இந்தியாவுக்காக 3 விதமான கிரிக்கெட், ஐபிஎல் தொடர் என தொடர்ந்து அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் விளையாடி வரும் அவரின் கால்களும் உடலும் 33 வயதை கடந்ததால் சற்று களைப்படைந்து ஓய்வடைய தொடங்கியதே இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.

இதையும் படிங்க : அவசியம் ஏற்படும் போது நாம இந்த ரூல்ஸ் லாம் யூஸ் பண்றதுல தப்பே இல்ல – அஷ்வின் ஓபன்டாக்

இது பற்றி சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மேலும் பேசியது பின்வருமாறு. “5 – 6 வருடங்களுக்கு முன்பாக அவர் மிகப்பெரிய சிக்ஸர்களை அடிப்பார். அந்த வகையில் தற்போது அடிக்கும் 50 – 60 ரன்களுக்கு பதிலாக அவர் எவ்வளவு தூரம் சிக்சர் அடிக்கிறார் என்பதை நான் கவனித்து வருகிறேன். எனவே அவரிடம் மீண்டும் அந்த பழைய பவர் திரும்பும் போது கண்டிப்பாக உண்மையான விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் வந்து விட்டார் என நானே கூறுவேன்” என்று தெரிவித்தார்.

Advertisement