அவசியம் ஏற்படும் போது நாம இந்த ரூல்ஸ் லாம் யூஸ் பண்றதுல தப்பே இல்ல – அஷ்வின் ஓபன்டாக்

Ashwin Hetmayer
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வெற்றிகரமான 2-வது வாரத்தைக் கடந்து பல பரபரப்பான த்ரில் தருணங்களுடன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. மும்பை நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரில் தற்போது முதலாவதாக நடைபெற்று வரும் 20 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் மல்லு கட்டி வருகின்றன. இந்த தொடரில் இதுவரை 22 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அதில் 4 போட்டிகளில் பங்கேற்ற சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் 3 வெற்றிகளை பதிவு செய்து 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் ஜொலிக்கிறது.

- Advertisement -

திரும்ப வைத்த அஷ்வின்:
அந்த அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் தம்மால் முடிந்த அளவுக்கு வெற்றிகளின் முக்கிய பங்காற்றி வருகிறார். அதிலும் லக்னோவுக்கு எதிரான போட்டியில் 67/4 என ராஜஸ்தான் தடுமாறிய போது களமிறங்கிய அவர் மறுபுறம் அதிரடியாக பேட்டிங் செய்த சிம்ரோன் ஹெட்மையருக்கு கம்பெனி கொடுக்கும் வகையில் மிகச்சிறப்பாக 23 பந்துகளில் 2 சிக்ஸர் உட்பட 28 ரன்கள் எடுத்தார்.

அந்த நிலையில் 18.2 ஓவரின் போது ஒரு பவுலரான தம்மால் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியாது எனக் கருதிய அவர் உடனடியாக எதைப்பற்றியும் கவலைப்படாமல் ரிட்டயர்டு அவுட் முறையை பயன்படுத்தி பெவிலியன் திரும்பி இந்த உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார். ஏனெனில் பல பரிணாமங்களை பெற்றுள்ள கிரிக்கெட்டில் இதுபோல் காயமடையாத நேரத்திலும் கடைசி நேரத்தில் சுயநலம் இல்லாமல் அணியின் நலன் கருதி அடுத்த வீரர்களுக்கு வழிவிடும் வகையில் பெவிலியன் திரும்புவது அரிதினும் அரிதான செயலாகும். சொல்லப்போனால் ஐபிஎல் வரலாற்றில் இது போல ரிட்டயர்டு அவுட் முறையில் பெவிலியன் திரும்பிய முதல் வீரர் என்ற பெருமையையும் அஷ்வின் இதன் வாயிலாக பெற்றார்.

parag

ஏற்கனவே நாம் லேட்:
இந்நிலையில் அந்த உலகைத் திரும்பிப் பார்க்கவைத்த தருணத்தைப் பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அஸ்வின் பேசியது பின்வருமாறு. “இது ஒரு சில நேரங்களில் வேலை செய்யும், சில சமயம் வேலை செய்யாமலும் போகும். இருப்பினும் இதுபோன்ற நிகழ்வுகள் கால்பந்தாட்டத்தில் சாதாரணமாக நடைபெற்று வருகிறது. நாம் தான் அதை டி20 கிரிக்கெட்டில் பயன்படுத்தாமல் இருக்கிறோம். இது அடுத்த தலைமுறை விளையாட்டு. நீங்கள் ரொனால்டோ அல்லது மெஸ்ஸி ஆகியோர் அடிக்கடி கோல் போடுவதை பார்த்து இருப்பீர்கள். ஆனால் அவர்களது அணியின் கோல்கீப்பர்களும் கோல்களை தடுத்து நிறுத்த வேண்டும். இதர வீரர்களும் டிபன்ட் செய்ய வேண்டும். அவர்கள் அந்த வேலையை செய்தால் மட்டுமே ரொனால்டோ அல்லது மெஸ்ஸியால் வெளிச்சத்திற்கு வர முடியும்”

- Advertisement -

“அதேபோல் டி20 கிரிக்கெட் தற்போது கால்பந்து ஆட்டத்தை போல முன்னேறி வருகிறது. அதில் சப்ஸ்டியூட் பயன்படுத்துவதைப் போல நான் இதை (ரிட்டயர்டு அவுட்) செய்தேன். சொல்லப்போனால் நாம் ஏற்கனவே தாமதித்து விட்டோம். இனி வரும் காலங்களில் இதை நிறைய பார்ப்போம் என நம்புகிறேன். இதை செய்வதால் எந்தவித தயக்கமும் இல்லை” என கூறினார்.

Ashwin

உலகின் மிகப்பெரிய விளையாட்டாக கருதப்படும் கால்பந்தாட்டத்தில் இதே வகையான யுத்திகள் காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் கிரிக்கெட்டில் மட்டும் அதை செய்வதற்கு பலரும் தயங்குகின்றனர் என அஷ்வின் தெரிவித்துள்ளார். அந்த வகையில் கிரிக்கெட் விளையாடும் நாம் ஏற்கனவே இந்த விஷயத்தில் லேட் எனக் கூறும் அவர் இதுபோன்ற சிறிய முடிவு போட்டியின் வெற்றியை தலைகீழாக மாற்றக் கூடியது என பேசினார்.

- Advertisement -

அது போன்ற தருணத்தில் 10 பந்துகள் மீதம் இருந்த நிலையில் கிருஷ்ணப்பா கௌதம் அல்லது ரியன் பராக் போன்றவர்கள் தனது இடத்தில் விளையாடி குறைந்தது 2 சிக்சர்கள் அடித்தால் கூட அது அணிக்கு நன்மை செய்யும் என்பதாலேயே அந்த முடிவை எடுத்ததாக அஷ்வின் தெரிவித்துள்ளார். இதுவும் அணியை வெற்றி பெற வைப்பதற்கான ஒரு வழி என கூறியுள்ள அவர் இதை செய்வதற்கு யாரும் தயங்கக் கூடாது என்று இந்த உலகத்திடம் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க : துவண்டு போயி தரையில் அமர்ந்த சூரியகுமார் யாதவ். ஆறுதல் சொன்ன பொல்லார்டு – என்ன நடந்தது?

ஏற்கனவே கடந்த 2019-ஆம் ஆண்டு ஜோஸ் பட்லரை மன்கட் செய்து உலக அளவில் திட்டுக்களை வாங்கினாலும் தொடர்ந்து தனது கருத்தில் விடாப்பிடியாக இருந்த அஷ்வின் சமீபத்தில் அந்த மன்கட் முறையை எம்சிசி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் அளவுக்கு வெற்றி கண்டார். அந்த வகையில் தற்போது ரிட்டயர்டு அவுட் முறையை கையில் எடுத்துள்ள அஷ்வின் இதிலும் விரைவில் வெற்றி காண்பார் என நம்பலாம்.

Advertisement