- Advertisement -
ஐ.பி.எல்

ஐ.பி.எல் வரலாற்றில் யாரும் படைக்காத அபார சாதனையை படைத்து அசத்திய தவான் – விவரம் இதோ

ஐபிஎல் தொடரில் 38 ஆவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஐபிஎல் வரலாற்றில் ஒரு புதிய சாதனை ஒன்றைப் படைத்து அசத்தியுள்ளார்.

அதாவது சென்னை அணிக்கு எதிரான கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் அடித்த தவான் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்து இரண்டு சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.

- Advertisement -

அதே போல ஒரே ஐ.பி.எல் தொடரில் ஒன்றுக்கும் மேற்பட்ட சதங்கள் விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பாக கோலி ஒரே தொடரில் 4 சதங்களை விளாசி ஒரே தொடரில் அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் 61 பந்துகளை சந்தித்த தவான் 3 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்து தவானின் ஸ்ட்ரைக் ரேட் விடயம் குறித்து அனைவரும் பேசி விமர்சித்து வந்தனர். ஆனால் கடைசி 2 போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி தனது வேகமான ஆட்டத்தினை அவர் வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.

- Advertisement -
Published by