எனது இடத்தை இவர் சிறப்பாக பயன்படுத்தினார். அவரது திறமை அபரிவிதமானது – தவான் பேட்டி

- Advertisement -

இந்திய அணியின் இடதுகை துவக்க வீரரான ஷிகர் தவான் சையத் முஷ்டாக் அலி கோப்பையின் போது கால் முட்டியில் காயம் அடைந்தார். இதனால் அவருக்கு கால் முட்டி பகுதியில் 25 தையல்கள் போடப்பட்டன. இந்த காயத்தில் இருந்து குணமடைந்த அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர் தொடங்குவதற்கு முன்னர் காயம் முழுமையாக கூட முடியாத காரணத்தால் அவர் அந்த தொடரில் இருந்து விலகினார்.

Dhawan

- Advertisement -

அதன் காரணமாக அவருக்கு பதிலாக ராகுல் இந்திய அணியின் தொடக்க வீரராக களம் இறங்கி அசத்தினார். இந்நிலையில் தற்போது மீண்டும் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்த தவான் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இந்திய அணிக்குத் திரும்பியுள்ளார்.

இதற்கு முன்பாக இன்று ரஞ்சி கிரிக்கெட்டுக்காக டெல்லி ஐதராபாத் மோதும் ஆட்டத்தில் இன்று டெல்லி அணியின் கேப்டனாக களமிறங்கினார். இதற்கு முன்னர் அவர் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது : முதலில் விரலில் பந்து பட்டு காயம் அடைந்தேன். அதன் பிறகு கழுத்து கண் மற்றும் கால் முட்டி என அடுத்தடுத்து காயம் ஏற்பட்டது.

dhawan

விளையாட்டில் காயம் அடைவது சகஜம் அதை ஏற்றுத்தான் ஆகவேண்டும். ஓய்வில் இருந்து மீண்டும் விளையாடுவது என்னை பாதிக்கவில்லை. எப்படி விளையாட வேண்டும் என்பதை நான் மறக்கவும் இல்லை எனது திறமை நிரந்தரமானது என்று தவான் கூறினார். மேலும் எனக்கு பதிலாக இந்திய அணியில் இடம் பிடித்த லோகேஷ் ராகுல் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தொடர்ந்து ரன்களை குவித்தார்.

Rahul

அவரது திறமையைப் பார்க்கும்போது நன்றாக இருக்கிறது. நான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிவந்து என்னுடைய திறமையை வெளிப்படுத்துவேன். அணிக்காக உழைக்க வேண்டும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் இதுவே எனது லட்சியம். சவால்களை எப்போதும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறேன். மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி எனது பங்களிப்பை அளிக்க காத்திருக்கிறேன் என்றும் தவான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement