சரியான நேரத்தில் கேப்டன் தவான் எடுத்த அருமையான முடிவு – வெற்றிக்கு வழிவகுத்த புத்திசாலித்தனம்

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி கேப்டன் தவான் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அது சிறப்பான ஆட்டத்தினால் 20 ஓவர்களின் முடிவில் 164 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இலங்கை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி துவக்க வீரர்களாக இலங்கை அணி சார்பாக அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் பனுஷ்கா ஆகியோர் களமிறங்கினர்.

- Advertisement -

துவக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ஆரம்பித்த இலங்கை துவக்க வீரர்களை சரியாக கவனித்த இந்திய அணியின் கேப்டன் தவான் பவர்பிளேவின் மூன்றாவது ஓவரை சுழற்பந்து வீச்சாளரான க்ருனால் பாண்டியாவை வீச வைத்தார். ஏற்கனவே ஒருநாள் போட்டியின் போது ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் பந்து வீசிய க்ருனால் பாண்டியா ரன்களை கட்டுப்படுத்தியது மட்டுமின்றி விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அந்த வகையில் தற்போது ரன்கள் கசிந்து கொண்டிருந்த இந்த வேளையில் முக்கியமான அந்த மூன்றாவது ஓவரை க்ருனால் பாண்டியாவை வீச வைத்தார். அவர் நினைத்தது போலவே அந்த ஓவரில் தொடக்க வீரரான பனுஷ்காவும் ஆட்டமிழந்தார். தவான் எடுத்த இந்த ஒரு முடிவு இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தது அதே போன்று மீண்டும் சாகல் பந்துவீசுகையில் தனஞ்ஜெயா டி சில்வா 7 ஆவது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். இப்படி சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் துவக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி அதன் பின்னர் மூன்றாவது விக்கெட்டை விரைவாக புவனேஸ்வர் குமார் இடம் இழந்தது.

chahal

50 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி ஆனது அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து இறுதியில் 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கேப்டன் தவானின் செயல்பாடு மிக அற்புதமாக இருந்தது. போட்டியின் போது அவர் பவுலர்களை பயன்படுத்திய விதம் அருமையாக இருந்தது.

bhuvi

சரியான நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர்களையும், சுழற்பந்து வீச்சாளர்களையும் சுழற்சி முறையில் அவர் பந்து வீசச் செய்தார். அதேபோன்று ஸ்பின் பவுலர் சிறப்பாக பந்து வீசியதால் சாகல் மற்றும் வருன் சக்ரவர்த்தி ஆகியோரை முழுவதுமாக 4 ஓவர்களை வீச வைத்து இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்தார். இப்படி அவர் கேப்டன்சியில் செய்த சின்ன சின்ன விஷயங்கள் இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது என தற்போது அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement