டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனையை படைத்த கேப்டன் ஷிகர் தவான் – இதை கவனிச்சீங்களா ?

Dhawan-1
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி டி20 போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. ஏற்கனவே நடைபெற்ற முதல் இரண்டு ஆட்டங்களில் இந்திய அணி மற்றும் இலங்கை அணி ஆகிய இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில் தொடர் சமநிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதன் மூலம் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

INDvsSL

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் மட்டுமே குவிக்க அதனைத் தொடர்ந்து 82 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணி ஆனது 14.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும் சூழ்நிலை காரணமாகவே இதெல்லாம் நடந்துள்ளதால் ரசிகர்கள் பெரிய அளவில் வருத்தம் அடைய வில்லை. இருப்பினும் இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனான ஷிகர் தவான் தற்போது ஒரு மோசமான சாதனை ஒன்றை கேப்டனாக படைத்துள்ளார்.

Dhawan

அது சற்று வருத்தத்தை தரும் செய்தியாகவே மாறியுள்ளது. அந்த மோசமான சாதனை யாதெனில் இந்திய டி20 அணியின் கேப்டனாக இதுவரை யாரும் முதல் பந்தில் கோல்டன் டக் அவுட் ஆனதில்லை அந்த சாதனையை நேற்று தவான் படைத்துள்ளார். தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் தவான்.

இந்திய அணியின் கேப்டனாக டி20 கிரிக்கெட்டில் முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்த வீரர் என்ற மோசமான சாதனைக்கு தற்போது ஷிகர் தவான் சொந்தக்காரர் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement