கிரிக்கெட் விளையாடுங்கன்னு வெஸ்ட் இண்டீஸ் அனுப்புனா. இவங்க பண்ற வேலைய பாருங்க – வைரல் வீடியோ

Dhawan

இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையின் காரணமாக தடைபட்டது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

iyer

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில் இந்திய வீரர் ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் அகர்வால் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பொல்லார்டு ஆகியோர் டிரினிடாட் தீவில் உள்ள ஒரு ஆற்று பகுதிக்கு சென்று தங்களது ஓய்வினை அனுபவித்து வருகின்றனர்.

அதில் ஒரு ஆற்றின் நடுவே ஷிகர் தவான் மற்றும் ஐயர் ஆகியோர் கயிறின் மூலம் அந்தரத்தில் பறந்தபடி வந்து குதித்து தங்களது மகிழ்ச்சியை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இதோ அந்த வீடியோ :

 

View this post on Instagram

 

Open water, the greenery and fresh air = bliss. ????

A post shared by Shikhar Dhawan (@shikhardofficial) on

இதனை கண்ட இந்திய ரசிகர்கள் கிரிக்கெட் விளையாட உங்களை அங்கே அனுப்பினால் நீங்கள் ஜாலியாக பொழுதை கழித்துக் கொண்டு இருக்கிறீர்களா என்று கமெண்ட் செய்தும் வருகின்றனர். இருப்பினும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வு மற்றும் இதுபோன்ற விடயங்கள் ஒருபோதும் தவறு கிடையாது.

- Advertisement -