அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் நாயகனான நடராஜன் தற்போது இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு இந்திய அணியின் பேக்கப் பவுலராக சென்ற அவர் அணியில் இடம்பெற்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமானார். அதுமட்டுமின்றி அவர் தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் தற்போது உலகம் முழுவதிலும் தனது பெயர் தெரியும்படி பெரிய தடத்தினைப் பதித்துள்ளார். உலகளவில் பல்வேறு கிரிக்கெட் ஜாம்பவான்களின் வாயிலாகவும் நடராஜன் இன்று புகழப்பட்டு வருகிறார்.
அவரின் எளிமை மற்றும் பணிவு ஆகியவை கேப்டன் கோலி மற்றும் ஹர்டிக் பண்டியாவை பெரிய அளவு கவர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்திய ரசிகர்களின் மனதிலும் நடராஜன் விரைவிலேயே இடம் பிடித்து விட்டார். இனி வரும் தொடர்களில் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக மாறியிருக்கும் நடராஜன் இனியும் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசுவார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்திய அணியின் அதிரடி வீரரான ஹர்டிக் பாண்டியா அவருற்கு தற்போது நெருங்கிய நண்பராகவும் நடராஜன் மாறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது தான் வாங்கிய தொடர் நாயகன் விருதை பாண்டியன் நடராஜருடன் கொடுத்து மகிழ்ந்து கொண்டார். அந்த அளவிற்கு அவரும் இவரும் நண்பராகவே பழக ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் தற்போது நடராஜன் வாழ்க்கை கிரிக்கெட் படமாகிறது. 1991 ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி சேலம் சின்னப்பம்பட்டியில் பிறந்த இவர் பிறப்பு முதலே ஒரு கிரிக்கெட் வீரர் இல்லை. எளிமையான பின்னணியைக் கொண்ட இவர் 20 வயதிற்கு பின் தான் டென்னிஸ் பந்து விளையாட ஆரம்பித்துள்ளார்.
இன்று அவர் உலகம் போற்றும் சிறந்த பந்து வீச்சாளராக மாறி நிற்கும் அவர் தனது இளவயதில் கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாத நடராஜன் இந்த ஒன்பது வருட காலத்திற்குள் பும்ரா அளவிற்கு நிகரான ஒரு பந்து வீச்சாளராக பேசப்பட்டு வருகிறார். அவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் தமிழ் முன்னணி நடிகரான தனுஷ் நடிக்கிறார் சூரரைப்போற்று இயக்குனர் சுதா கங்கோரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசை அமைப்பில் இந்த படம் உருவாக இருக்கிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்றும் இது குறித்த அதிகாரபூர்வ டிரைலர் ஒன்றை நேற்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பதிவிட்ட சில நிமிடங்களிலேயே இலட்சக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்த இந்த ட்ரெய்லர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது அதுமட்டுமின்றி இந்த படத்திற்கும் நடராஜன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன் இன்று எப்படி சாதித்து வருகிறார் என்பது குறித்த படமே இந்த நடராஜன் என்கிற திரைப்படமாக உருவாக உள்ளது.
அவர் பட்ட துன்பங்களும், துயரங்களும், கஷ்டங்களும் தான் இன்றைக்கு அவரை இந்த நிலைக்கு ஆளாகி இருக்கிறது. அந்த நிகழ்வுகளை அப்படியே படமாக்கி இனிவரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு உற்சாகமான திரைப்படமாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால் இப்போதே இந்த படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.