108 ரன்ஸ்.. திருப்பூருக்கு தாக்கத்தை ஏற்படுத்தாத நடராஜன்.. அதிரடி வெற்றியால் திண்டுக்கல் ஏற்றம்

TNPL 17
- Advertisement -

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 டி20 தொடரில் ஜூலை 15ஆம் தேதி 16வது போட்டி நடைபெற்றது. கோயம்புத்தூரில் உள்ள எஸ்என்ஆர் காலேஜ் கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு நடைபெற்ற அந்தப் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. மழையால் தாமதப்பட்ட அப்போட்டி இருதரப்புக்கும் 13 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.

அந்த சூழ்நிலையில் துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய திருப்பூர் அணிக்கு நிதானமாக விளையாடிய ஓப்பனிங் ஜோடி ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தது. அதில் ராதாகிருஷ்ணன் 36 (30), துஷார் ரஹீஜா 32 (26) ரன்கள் குவித்து அவுட்டானார்கள்.

- Advertisement -

திண்டுக்கல் வெற்றி:
ஆனால் மிடில் ஆர்டரில் கணேஷ் 0, பாலச்சந்தர் அனிருத் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் அமித் சாத்விக் அதிரடியாக 28* (15) ரன்களும் கேப்டன் சாய் கிஷோர் 2* (1) ரன்களும் எடுத்ததால் 13 ஓவரில் திருப்பூர் 108/4 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் சார்பில் அதிகபட்சமாக சுபோத் பாட்டி மூன்று விக்கெட்டுகள் சாப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து 109 ரன்களை துரத்திய திண்டுக்கல் அணிக்கு ஆரம்பத்திலேயே திணறிய சிவம் சிங் 4 (5) ரன்களில் அவுட்டானார். அடுத்த சில ஓவரில் மறுபுறம் தடுமாறிய விமல் குமார் 17 (16) ரன்னில் ரன் அவுட்டானார். ஆனால் அடுத்ததாக ஜோடி சேர்ந்த பூபதி குமார் மற்றும் பாபா இந்திரஜித் ஆகியோர் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடி தங்களுடைய அணி வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தனர்.

- Advertisement -

இருப்பினும் கடைசி 4 ஓவரில் திண்டுக்கல் அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்ட போது 2 ஓவரை மீதம் வைத்திருந்த நடராஜன் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வீசிய 10வது ஓவரிலும் அட்டகாசமாக விளையாடிய இந்த ஜோடி 16 ரன்கள் அடித்து வெற்றியை உறுதி செய்தது. இறுதியில் பாபா இந்திரஜித் 31* (25) ரன்களும் பூபதி குமார் அதிரடியாக 51* (25) ரன்களும் விளாசினார்கள்.

இதையும் படிங்க: மகளிர் ஆசிய கோப்பை 2024 : சாதிக்குமா இந்திய சிங்கப்பெண்கள் படை.. அட்டவணை, எந்த சேனலில் பார்க்கலாம்

அதனால் 11.5 ஓவரிலேயே 111/2 ரன்கள் எடுத்த எடுத்த திண்டுக்கல் 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. மறுபுறம் பேட்டிங்கில் பெரிய ரன்கள் எடுத்த தவறிய திருப்பூருக்கு புவனேஸ்வரன் 1 விக்கெட் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இதையும் சேர்த்து 4 போட்டிகளில் 2வது வெற்றியை பதிவு செய்த ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் மூன்றாவது தோல்வியை பதிவு செய்த திருப்பூர் 7வது இடத்திற்கு சரிந்தது.

Advertisement