அவரோட என்னை கம்பேர் பண்ணி பேசுறது பெருமை தான்.. ஆனா நான் நானா இருக்க ஆசைப்படுறேன் – பிரேவிஸ் பேட்டி

Brevis CSK
- Advertisement -

அகமதாபாத் நகரில் இன்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 67-வது லீக் போட்டியில் விளையாடிய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றதுடன் இந்த தொடரை வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது. ஏற்கனவே புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தாலும் கடைசி போட்டியில் சென்னை அணி பெற்ற வெற்றி ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நான் நானாக இருக்க விரும்புகிறேன் : ஆட்டநாயகன் பிரேவிஸ்

அந்த வகையில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 230 ரன்களை குவிக்க பின்னர் 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய குஜராத் அணி 147 ரன்களுக்கே சுருண்டதால் 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியின் போது சென்னை அணியின் சார்பாக அதிகபட்சமாக டேவால்டு பிரேவிஸ் 23 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர் என 57 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த அசத்தலான ஆட்டம் காரணமாகவே சென்னை அணி வெற்றி பெற்றதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய ஆட்டநாயகன் பிரேவிஸ் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் நான் விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டியில் நான் எந்தவொரு அழுத்தமும் இன்றி என்னுடைய ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினேன். இதுபோன்று மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும் என்று என் மனதிடம் எப்போதும் கூறிக் கொள்கிறேன்.

- Advertisement -

சென்னை அணியில் இணைந்ததிலிருந்து நான் விளையாடி வரும் விதம் உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எப்பொழுதுமே சூழ்நிலைகளை கணக்கில் கொள்ளாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று மட்டுமே நினைப்பேன். இதுபோன்ற ஒரு இன்னிங்ஸ் என்னிடம் இருந்து வந்ததில் திருப்தியாக இருக்கிறது. நான் விளையாடும் விதத்தை பார்த்து என்னை பலரும் ஏ.பி.டி வில்லியர்ஸ் உடன் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள்.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியிடம் நாங்க தோக்க முழுக்க முழுக்க இதுமட்டும் தான் காரணம் – சுப்மன் கில் வருத்தம்

நான் சிறுவயதில் இருந்து பார்த்து வளர்ந்த ஜாம்பவான் வீரர் அவர். என்னுடைய ஆட்டம் இவ்வளவு மேம்பட அவரும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறார். அவரைப் போன்ற ஒரு ஜாம்பவானுடன் என்னை ஒப்பிட்டு பேசுவது எனக்கு மிகப்பெரிய கௌரவம் தான். ஆனாலும் நான் நானாக இருக்க விரும்புகிறேன் என பிரேவிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement