7.3 பந்துக்கு ஒரு சிக்ஸ்.. யாரு சாமி நீ.. துபே, தோனியை மிஞ்சிய குட்டி ஏபிடி ப்ரேவிஸ்.. மிரட்டல் சாதனை

Dewald Brevis
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பம் முதலே திண்டாடி வந்தது. அதனால் முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறிய சிஎஸ்கே 14 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்றது. அதனால் வரலாற்றில் புள்ளிப்பட்டியலில் முதல் முறையாக கடைசி இடத்தைப் பிடித்த சிஎஸ்கே மோசமான சாதனையுடன் வெளியேறியது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது.

இருப்பினும் இந்த தோல்விகளுக்காக துவளாத சிஎஸ்கே 2026 ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுக்கும் என்று கேப்டன் தோனி தெரிவித்திருந்தார். அதனாலயே சிஎஸ்கே அணி நிர்வாகம் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது. அந்த வாய்ப்பில் ஆயுஷ் மாத்ரே, தேவால்ட் ப்ரேவிஸ், உர்வில் படேல் ஆகியோர் மிகச்சிறப்பாக விளையாடி நம்பிக்கை நட்சத்திரங்களாக தங்களை அடையாளப்படுத்தியுள்ளனர்.

- Advertisement -

7.3 பந்துக்கு ஒரு சிக்ஸ்:

குறிப்பாக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இளம் வீரர் தேவால்ட் ப்ரேவிஸ் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அந்த 6 போட்டிகளில் 225 ரன்களை 180 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய அவர் 13 பவுண்டரி 17 சிக்சர்களைப் பறக்க விட்டார். இந்த வருடம் சிஎஸ்கே அணிக்காக 2வது அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ள அவர் குஜராத்துக்கு எதிரான போட்டியில் 19 பந்துகளில் அரை சதத்தை அடித்தார்.

அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்காக 2வது வேகமான அரை சதத்தை அடித்த வீரராகவும் ப்ரேவிஸ் சாதனை படைத்துள்ளார். இவை அனைத்தையும் விட இந்த வருடம் தேவால்ட் ப்ரேவிஸ் மொத்தம் 125 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். அந்த 125 பந்துகளில் அவர் 17 சிக்சர்கள் அடித்துள்ளார். அதாவது சராசரியாக தாம் எதிர்கொள்ளும் 7.3 பந்துக்கு ஒருமுறை ப்ரேவிஸ் ஒரு சிக்ஸரை அடித்துள்ளார்.

- Advertisement -

மிரட்டல் சாதனை:

இதன் வாயிலாக 2025 ஐபிஎல் தொடரில் சிவம் துபே, தோனியை முந்தியுள்ள அவர் குறைந்த பந்துக்கு ஒரு முறை சிக்ஸர்களை அடித்த சிஎஸ்கே வீரராக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. தேவால்ட் ப்ரேவிஸ்: 7.3 பந்துகள் (17 சிக்ஸர்கள்)
2. ஆயுஷ் மாத்ரே: 11.5 பந்துகள் (11 சிக்ஸர்கள்)
3. எம்எஸ் தோனி: 12.1 பந்துகள் (12 சிக்ஸர்கள்)
4. சிவம் துபே: 12.8 பந்துகள் (21 சிக்ஸர்கள்)
5. ரவீந்திர ஜடேஜா: 22.2 பந்துகள் (10 சிக்ஸர்கள்)

இதையும் படிங்க: நாங்க பைனலுக்கு வரவேண்டிய டீம்.. ஆனா இப்படி நடந்ததில் வருத்தம் தான் – பேட் கம்மின்ஸ் பேட்டி

இதைப் பார்க்கும் சிஎஸ்கே ரசிகர்கள் யாரு சாமி நீ இவ்வளவு நாளா எங்கிருந்த என்று அவரை பாராட்டாமல் இருக்க முடியாது. ஏனெனில் அந்தளவுக்கு இந்த வருடம் சிஎஸ்கே அணி சிக்ஸர்களை அடிக்காமல் அதிரடியாக விளையாடாமல் போனதே தோல்வியைக் கொடுத்தது. மொத்தத்தில் குட்டி ஏபிடி என்ற பெயரைக் கொண்ட ப்ரேவிஸ் அடுத்த வருடமும் அசத்துவார் என்று சிஎஸ்கே ரசிகர்கள் நம்புகின்றனர்.

Advertisement