ஷிகர் தவானின் 18 வருட மாஸ் சாதனையை தகர்த்து புதிய உலகசாதனை படைத்த தெ.ஆ இளம் வீரர் – அடுத்த ஏபிடி வந்தாச்சு

Brevis
- Advertisement -

மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்று வரும் ஐசிசி அண்டர் 19 உலக கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் துவங்கிய இந்த உலக கோப்பையில் இந்தியா உட்பட உலகின் முதன்மையான 16 அணிகள் பங்கு பெற்று வருகின்றன. இந்த உலக கோப்பையின் வெற்றியாளரை தீர்மானிக்க நடந்த லீக் சுற்று மற்றும் நாக்-அவுட் சுற்றுகளின் முடிவில் அபாரமாக செயல்பட்ட இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளன.

U-19-2

- Advertisement -

இதை அடுத்து இந்த உலக கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியானது பிப்ரவரி 5ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆண்டிகுவா நகரில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் துவங்கவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று 5வது முறையாக ஐசிசி அண்டர் 19 உலகக்கோப்பையை இந்தியா வெல்லுமா என இந்திய ரசிகர்கள் இப்போட்டிக்காக காத்திருக்கிறார்கள்.

புதிய நாயகன் தேவால்ட் ப்ரேவிஸ்:
கிரிக்கெட்டின் வருங்கால நட்சத்திரங்களை கண்டறிந்து சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு முக்கிய கிரிக்கெட் தொடர் தான் இந்த ஐசிசி அண்டர் 19 உலககோப்பையாகும். தற்போதைய கிரிக்கெட்டில் ஜாம்பவான்களாக விளங்கும் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், கேஎல் ராகுல் என பல தரமான வீரர்கள் வரலாற்றில் அவ்வப்போது நடந்த இந்த உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட பின்னரே நட்சத்திரங்களாக உருவெடுத்தார்கள்.

Dewald-Brevis-1

அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் இந்த உலக கோப்பையில் தென்ஆப்பிரிக்க அணிக்கு ஒரு புதிய நாயகன் உருவாகியுள்ளார் என்றே கூறலாம். ஆம் இந்த உலகக்கோப்பையில் அந்த அணிக்காக ஆல்-ரவுண்டராக விளையாடி வரும் தேவால்ட் ப்ரேவிஸ் இந்த உலகக் கோப்பையில் ஒவ்வொரு போட்டியிலும் இதர தென்ஆப்பிரிக்க வீரர்கள் மோசமாக விளையாடிய போதும் தனி ஒருவனாக தனது அணியை பல தருணங்களில் தாங்கிப் பிடித்தார். இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 65 ரன்களை எடுத்த அவர் உகாண்டாவுக்கு எதிரான போட்டியில் சதமடித்து 104 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

ஷிகர் தவான் சாதனை தகர்ப்பு:
அதன்பின் நடந்த அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 96 ரன்கள் விளாசிய அவர் அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த முக்கியமான காலிறுதிப் போட்டியில் 97 ரன்கள் குவித்த போதிலும் இதர தென்ஆப்பிரிக்க வீரர்கள் மோசமாக விளையாடியதன் காரணமாக அந்த அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இருப்பினும் இந்த உலக கோப்பையின் 7வது இடத்தை பிடிப்பதற்காக நேற்று வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டியில் மீண்டும் அபாரமாக பேட்டிங் செய்த அவர் சதமடித்து 138 ரன்கள் விளாசினார்.

மொத்தத்தில் இந்த உலக கோப்பையில் 6 போட்டிகளில் பங்கேற்ற அவர் 3 அரை சதங்கள் மற்றும் 2 சதங்கள் உட்பட 506 ரன்களை 84.33 என்ற அபாரமான சராசரியில் குவித்து இந்த உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த பேட்டராக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அத்துடன் இதன் வாயிலாக “ஐசிசி அண்டர் 19 உலக கோப்பை வரலாற்றில் ஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த பேட்டர் என்ற இந்திய நட்சத்திர வீரர் ஷிகர் தவானின் சாதனையை வெறும் 1 ரன் வித்தியாசத்தில் முந்தி புதிய உலகசாதனையை” தென்னாப்பிரிக்காவின் தேவால்ட் ப்ரேவிஸ் படைத்துள்ளார்.

- Advertisement -

அடுத்த ஏபி டீ வில்லியர்ஸ் :
இதற்கு முன் கடந்த 2004ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் இந்திய அணியின் ஷிகர் தவான் 505 ரன்கள் குவித்து இந்த சாதனை படைத்திருந்தார். ஆனால் தற்போது 506 ரன்கள் குவித்துள்ள தேவால்ட் ப்ரேவிஸ் 18 ஆண்டுகள் கழித்து வெறும் ஒரு ரன் வித்தியாசத்தில் அவரின் சாதனையை முறியடித்துள்ளார் என்பது வியப்பாக உள்ளது.

AB-de-Villiers-Royal-Challengers-Bangalore

இத்துடன் இந்த உலகக் கோப்பையில் அவர் விளையாடி 6 போட்டிகளில் 7 விக்கெட்டுகளையும் எடுத்து ஒரு நல்ல ஆல்-ரவுண்டராக தன்னை அடையாளப் படுத்தியுள்ளார். இவர் விளையாடும் பேட்டிங் ஸ்டைலை பார்க்கும்போது தென்னாப்பிரிக்காவின் முன்னாள் நட்சத்திர வீரர் ஏபி டிவிலியர்ஸ் போலவே உள்ளதாக பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக சில ரசிகர்கள் இவரை “பேபி ஏபி” என அழைக்க துவங்கி உள்ளார்கள்.

இதையும் படிங்க : ஐபிஎல் மெகா ஏலத்தில் குறைந்த விலைக்கு ஏலம் போகக்கூடிய ஸ்டார் பிளேயர்ஸ் லிஸ்ட் – இவங்களுக்கா இப்படி?

முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ்சின் தீவிர ரசிகரான இவர் டிவிலியர்ஸ் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐபிஎல் அணியின் தீவிரமான ரசிகர் ஆவார். அதன் காரணமாக இந்திய வீரர் விராட் கோலியின் ரசிகராகவும் மாறியுள்ள இவர் விரைவில் நடைபெற உள்ள ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் பங்கேற்க தனது பெயரை விண்ணப்பம் செய்துள்ளார். இந்த அண்டர் 19 உலக கோப்பையில் உலக சாதனை படைத்துள்ளதால் நிச்சயம் இவர் ஐபிஎல் ஏலத்தில் பெரிய தொகைக்கு ஏலம் போவார் என எதிர்பார்க்கலாம்.

Advertisement