ஐபிஎல் மெகா ஏலத்தில் குறைந்த விலைக்கு ஏலம் போகக்கூடிய ஸ்டார் பிளேயர்ஸ் லிஸ்ட் – இவங்களுக்கா இப்படி?

Star
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய 2 நாட்கள் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 590 வீரர்கள் பங்குபெறும் இந்த மெகா ஏலத்தில் தங்களுக்கு தேவையான தரமான வீரர்களை பல கோடி ரூபாய்கள் செலவழித்து வாங்க 10 அணிகளும் தயாராக உள்ளன. இந்த மெகா ஏலத்தில் ஷ்ரேயஸ் ஐயர், இஷான் கிசான் போன்ற சில இளம் இந்திய வீரர்களும் டேவிட் வார்னர் போன்ற சில வெளிநாட்டு நட்சத்திர வீரர்களும் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

IPL

- Advertisement -

அதேபோல மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்றுவரும் ஐசிசி அண்டர் 19 உலககோப்பை 2022 தொடரில் தங்களது திறமையை வெளிப்படுத்திய இளம் வீரர்களும் பெரிய கவனத்தை ஈர்ப்பார்கள் என நம்பப்படுகிறது.

ஒரு காலத்தில் ராஜாக்கள் ஆனால்:
இருப்பினும் ஒரு சில அனுபவம் வாய்ந்த நட்சத்திர இந்திய வீரர்கள் இந்த ஏலத்தில் மிகவும் குறைந்த விலைக்கு போவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஐபிஎல் 2022 தொடரில் மிகக் குறைந்த விலைக்கு ஏலம் போகக்கூடிய அனுபவம் வாய்ந்த சில நட்சத்திர இந்திய வீரர்களின் பட்டியல் பற்றி பார்ப்போம்:

Suresh raina

1. சுரேஷ் ரெய்னா : ஐபிஎல் வரலாற்றில் ஒரு வெற்றிகரமான பேட்டர் என்றால் அது நிச்சயம் சுரேஷ் ரெய்னாவாகும். ஆரம்ப காலங்களில் இவருக்கு பந்து வீசுவது என்றாலே எதிரணி பவுலர்களுக்கு கலக்கமாக இருக்கும். அந்த அளவுக்கு மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்க விடும் வல்லமை படைத்த இவரை ரசிகர்கள் “மிஸ்டர் ஐபிஎல்” என்று இப்போதும்கூட அழைத்து வருகிறார்கள்.

- Advertisement -

குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல வருடங்களாக அபாரமாக செயல்பட்டு அந்த அணியின் முக்கிய முதுகெலும்பு வீரராக சுரேஷ் ரெய்னா வலம்வந்தார். இருப்பினும் கடந்த சில வருடங்களாகவே ஐபிஎல் போட்டிகளில் ரன்கள் குவிக்க தடுமாறி வரும் இவர் கடந்த சீசனில் 12 போட்டிகளில் வெறும் 128 ரன்கள் மட்டுமே எடுத்து படுமோசமான பார்மில் உள்ளார். இதனால் ஐபிஎல் 2022 தொடருக்கான அணியில் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தக்க வைக்கவில்லை.

suresh

தற்போது 35 வயது கடந்துள்ள இவர் ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணியில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டதால் ஐபிஎல் 2022 ஏலத்தில் பெரிய தொகைக்கு ஒப்பந்தமாவது சந்தேகமாகும். இருப்பினும் இதுவரை 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 5528 ரன்களை எடுத்துள்ளதுடன் சென்னை ரசிகர்களால் “சின்ன தல” என்று அழைக்கப்படுவதால் இவரை சென்னை அணி நிர்வாகம் மீண்டும் வாங்க முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

2. புவனேஸ்வர் குமார் : ரெய்னா போலவே அதே உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமாரும் அவரைப் போலவே கடந்த சில வருடங்களாகவே மோசமான பார்மில் உள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன் புவனேஸ்வர் குமார் என்றால் துல்லியமாக பந்துவீசி குறைந்த ரன்களை மட்டுமே கொடுத்து விக்கெட்களை எடுப்பவர் என்ற நிலை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.

kumar

கடந்த 2018ஆம் ஆண்டு காயமடைந்த அவர் அதிலிருந்து முழுமையாக குணம் அடைந்த போதிலும் பழைய பன்னீர்செல்வமாக அவரால் பந்து வீச முடியவில்லை. சமீபத்தில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கூட அவரால் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை என்பதால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் நீக்கப்பட்டுள்ளார். இருப்பினும் கடைசி வாய்ப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் இடம்பிடித்துள்ள போதிலும் அதற்கு முன்பாகவே ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ளது. எனவே விரைவில் நடைபெற உள்ள மெகா ஏலத்தில் புவனேஸ்வர் குமாரை மிகப்பெரிய தொகைக்கு வாங்க அனைத்து அணிகளும் யோசிக்கும் என்பதே நிதர்சனமாகும்.

- Advertisement -

3. அஜிங்கிய ரகானே : இந்தியாவின் மற்றொரு நட்சத்திர அனுபவ வீரர் அஜிங்கியா ரஹானே கடந்த 2019க்கு முன்பு வரை ஐபிஎல் தொடரில் ஒரு நல்ல டாப் ஆர்டர் பேட்டராக வலம் வந்தார். குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஒரு சில போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட அவர் அதன்பின் 2020 சீசன் முதல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார்.

rahane

ஆனாலும் கடந்த சில வருடங்களில் கிடைத்த வாய்ப்புகளை சிறப்பாக செயல்பத்த தவறியதால் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. அத்துடன் ஏற்கனவே இந்திய வெள்ளைப் பந்து அணியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ள இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த சில வருடங்களாக படுமோசமான பார்மில் உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். எனவே டெஸ்ட் போட்டியிலேயே ரன்கள் குவிக்க தடுமாறும் அஜிங்கிய ரஹானே வரும் ஐபிஎல் ஏலத்தில் குறைந்த தொகைக்கு ஏலம் போவது கூட கடினமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

4. ஸ்ரீசாந்த் : ஒரு நல்ல திறமை பாழாய் போனதற்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என்றால் அது கேரளாவை சேர்ந்த ஸ்ரீசாந்த் ஆவார். கடந்த 2007 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் இந்தியா வென்ற உலக கோப்பை அணியில் இடம் பிடித்திருந்த அவர் கடந்த 2013ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடும் போது சூதாட்ட சர்ச்சையில் சிக்கி கிரிக்கெட்டில் விளையாட தடை பெற்றார்.

Sreesanth

அதன்பின் கடந்த வருடம் அந்த தடையில் இருந்து வெளிவந்த அவர் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பம் செய்துள்ளார். இருப்பினும் ஏற்கனவே 38 வயதை கடந்துவிட்ட இவரை ஐபிஎல் அணிகள் ஏலத்தில் எடுப்பார்களா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement