- Advertisement -
ஐ.பி.எல்

நானும் கிளம்புறேன்.. விஸ்வாசமான சிஎஸ்கே ரசிகர்களுக்கு நன்றி.. அந்த 3 வருடத்தை மறக்கல.. கான்வே உருக்கம்

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெறுகிறது. அதற்கு முன்பாக பல அணிகள் ட்ரேடிங் முறையில் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கி தேவையற்ற வீரர்களை விடுவித்து வருகிறது. அந்த வகையில் 5 முறை சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சனை 18 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து டிரேடிங் முறையில் வாங்கியுள்ளது.

அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகியோரை ராஜஸ்தான் அணிக்கு டிரேடிங் முறையில் சிஎஸ்கே கொடுத்துள்ளது. அதில் 2018, 2021, 2023 கோப்பைகளை வெல்ல முக்கிய பங்காற்றிய ஜடேஜாவை சிஎஸ்கே அணி கொடுத்துள்ளது நிறைய ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. ஏனெனில் சிஎஸ்கே அணிக்காக அதிக ஆட்டநாயகன் விருது வென்றுள்ள ஜடேஜா 2023 ஃபைனலில் கைமீறிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததை மறக்க முடியாது.

- Advertisement -

நானும் கிளம்புறேன்:

இந்த சூழ்நிலையில் தாமும் சிஎஸ்கே அணியிலிருந்து கிளம்ப உள்ளதாக டேவோன் கான்வே அறிவித்துள்ளார். நியூசிலாந்தைச் சேர்ந்த இடது கை ஓப்பனிங் பேட்ஸ்மேனான அவர் 2022 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக வாங்கப்பட்டார். அடுத்த வருடமே 672 ரன்களை குவித்த அவர் சிஎஸ்கே 2023 ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

2024 சீசனில் 6 போட்டிகளில் 156 ரன்கள் அடித்த கான்வே பாதியிலேயே காயத்தால் வெளியேறினார். இருப்பினும் நாடு திரும்பாத அவர் சிஎஸ்கே அணியுடன் இருந்து மருத்துவ உதவிகளைப் பெற்று தம்முடைய ஆதரவையும் கொடுத்தார். அப்படிப்பட்ட அவர் காயத்துக்கு பின் அதிரடியாக விளையாடத் தடுமாறி வருகிறார்.

- Advertisement -

நன்றி சொன்ன கான்வே:

அதனால் 2026 ஐபிஎல் தொடருக்கு முன் அவரை கழற்றி விட சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அதை அறிந்த டேவோன் கான்வே 2022 – 2025 ஆகிய 3 சிஎஸ்கே ரசிகர்களுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன் சிஎஸ்கே அணியில் தம்முடைய ஓப்பனிங் பார்ட்னரான ருதுராஜ் கெய்க்வாட்டுடன் இணைந்து விளையாடிய புகைப்படத்தையும் அவர் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜடேஜா போனதற்கு சிஎஸ்கே ரசிகர்களே முக்கிய காரணம்.. தோனிக்காக 2023இல் செய்த கூத்தை மறக்க முடியுமா?

இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “3 வருடங்கள் அற்புதமான ஆதரவைக் கொடுத்த விஸ்வாசம் மிகுந்த அனைத்து சிஎஸ்கே ரசிகர்களுக்கும் நன்றி” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். இது போக ரச்சின் ரவீந்திரா, தீபக் ஹூடா, விஜய் சங்கர், ராகுல் திரிபாதி, மதீஸா பதிரனா ஆகியோரையும் சிஎஸ்கே நிர்வாகம் கழற்றி விட முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -