7500 ரசிகர்களுக்கு மத்தியில் பாராட்டினை பெற்ற நியூசி வீரர் – அறிமுகப்போட்டியிலேயே இமாலய சாதனை படைத்தது அசத்தல்

Conway

நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னதாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்கள் குவித்து இருந்தது.

Nz vs Eng

நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி சார்பாக அறிமுகமான துவக்க வீரர் டேவான் கான்வே 135 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்நிலையில் இன்று நியூசிலாந்து தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து 378 ரன்களை குவித்து முடித்துக்கொண்டது.

- Advertisement -

நியூசிலாந்து சார்பாக அதிகபட்சமாக இந்த போட்டியில் அறிமுக வீரராக விளையாடிய டேவான் கான்வே 347 பந்துகளை எதிர்கொண்டு 200 ரன்கள் அடித்தார். இரட்டை சதத்தை பூர்த்தி செய்திருந்த வேளையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதன்மூலம் அறிமுகப் போட்டியில் இரட்டை சதம் அடித்த ஆறாவது பேட்ஸ்மன் என்ற இமாலய சாதனையை படைத்தார்.

conway 1

மேலும் நியூசிலாந்து சார்பாக அறிமுகப் போட்டியில் இரட்டை சதமடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அறிமுக போட்டியிலேயே தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவருக்கு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் குவிந்திருந்த 7500 ரசிகர்களும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்.

- Advertisement -

conway 2

அதோடு மட்டுமல்லாமல் இங்கிலாந்து மண்ணில் அறிமுகப் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் டேவான் கான்வே இந்த போட்டியில் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணி 378 ரன்கள் அடித்து இருக்கும் இவ்வேளையில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement