சி.எஸ்.கே அணியில் இருந்து நீக்கப்படத்திற்கு பிறகு டேவான் கான்வே வெளியிட்ட பதிவு – விவரம் இதோ

Conway
- Advertisement -

ஆண்டுதோறும் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வெற்றிகரமான தொடராக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2024 ஐபிஎல் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கைப்பற்றி அசத்தியிருந்தது. அதனைத்தொடர்ந்து அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

நன்றி தெரிவித்த டேவான் கான்வே :

அதன் முதற்கட்டமாக அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது இம்மாத இறுதியில் சவுதி அரேபியாவில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் கேட்டுக்கொண்டது. அதன்படி அக்டோபர் 31-ஆம் தேதி அன்று அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலில் வெளியிட்டிருந்தது.

- Advertisement -

அதில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் என்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தங்களது அணியில் ஐந்து வீரர்களை தக்க வைத்துக் கொண்டு மீதமுள்ள 55 கோடிகளுடன் ஏலத்தை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. சென்னை அணி சார்பாக முதல் வீரராக ருதுராஜ் கெய்க்வாட் 18 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். அவருக்கு அடுத்து ஜடேஜாவும் 18 கோடிக்கு தக்கவைக்கப்பட்டுள்ளார்.

மீதமுள்ள இடங்களில் ஷிவம் துபே மற்றும் பதிரானா ஆகியோர் 13 மற்றும் 11 கோடிக்கும், அன் கேப்டு வீரராக எம்.எஸ் தோனி 4 கோடி ரூபாய்க்கும் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிஎஸ்கே அணியில் கடந்த சில ஆண்டுகளாக துவக்க வீரராக விளையாடி வந்த நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான டேவான் கான்வே விடுவிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

கடந்த இரண்டு சீசங்களாகவே மிக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவரை சென்னை அணி கழட்டிவிட்டது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சென்னை அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு தனது முதல் பதிவை வெளியிட்ட டேவான் கான்வே அது குறித்து சில கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் பதிவிட்டதாவது : கடந்த இரண்டு வருடங்களாக சிஎஸ்கே ரசிகர் அளித்த ஆதரவிற்கும், அன்பிற்கும் மிகவும் நன்றி.

இதையும் படிங்க : கிங் கோலி ஐபிஎல் வரலாற்று சாதனை.. கோப்பை வென்றும் கழற்றி விட்டதால் ஸ்ரேயாஸ் ஐயர் பரிதாப சாதனை

நான் விளையாடிய சில ஆண்டுகள் எனக்கு தொடர்ச்சியான ஆதரவையும், அன்பையும் வழங்கிய அனைவருக்குமே நன்றி என்று பதிவிட்டுள்ளார். இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் போது காயம் காரணமாக இடம்பெறாமல் இருந்த அவருக்கு பதிலாக ரச்சின் ரவீந்திரா அந்த இடத்தில் விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement