எனக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்க கூடாது. ஆனாலும் நடந்திடுச்சி – தேவ்தத் படிக்கல் பேட்டி

padikkal
- Advertisement -

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக அறிமுகமான இளம் கிரிக்கெட் வீரரான படிக்கல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெங்களூரு அணி சார்பாக அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். அதனை தொடர்ந்து இந்த ஆண்டும் சிறப்பான ஆட்டத்தை அவர் பெங்களூர் அணிக்காக வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பயிற்சியில் இணைந்த அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

- Advertisement -

ஏற்கனவே இந்த தொடருக்கு முன்னர் தனது வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டிருந்த அவருக்கு தற்போது பயிற்சிக்கு திரும்பிய பின்னர் கடைசியாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை முடிந்து மீண்டும் கொரோனா இல்லை என்று உறுதியான தொடர்ந்து அவர் அணியில் இணைய காத்திருக்கிறார்.

மேலும் அதற்கான பயிற்சிகளையும் தற்போது அவர் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தனக்கு ஏற்பட்ட இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பேசிய அவர் கூறியதாவது : தொற்று ஏற்பட்டது எனக்கு பின்னடைவு தான். அது மட்டும் எனக்கு நடந்திருக்கவே கூடாது இருந்தாலும் தொற்று ஏற்படுவது நமது கட்டுப்பாட்டில் இல்லை. எனக்கு கொரனோ உறுதியானதும் அதிலிருந்து விரைவாக விடுபட நினைத்தேன்.

Padikkal 1

மேலும் சரியான சிகிச்சை மற்றும் ஓய்வுக்குப் பிறகு தற்போது நான் பூரண குணமடைந்து உள்ளேன். இப்பொழுது என்னுடைய நோக்கமெல்லாம் என்னுடைய பிட்னஸ் மற்றும் பேட்டிங்கை மேம்படுத்துவது தான். தற்போது என்னை நானே தயார் செய்து வருகிறேன் சீக்கிரம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என படிக்கல் கூறினார்.

Padikkal

மேலும் கடைசியாக நடைபெற்ற ஐபிஎல் சீசன் மற்றும் அண்மையில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட்டில் பெரிய அளவில் நான் ரன்களை குவித்துள்ளது என்னால் முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் தந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement