இந்திய அணியின் முன்னாள் இடதுகை ஓப்பனரான இவரே எனது ரோல்மாடல் – தேவ்தத் படிக்கல் ஓபன் டாக்

padikkal
- Advertisement -

துபாயில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் இளம் வீரர்கள் பலர் தங்களது திறனை வெளிப்படுத்தி இருந்தனர். அதிலும் குறிப்பாக பெங்களூரு அணியின் இளம் வீரரான தேவ்தத் படிக்கல்க்கு இந்த ஆண்டு அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. மேலும் தான் பங்கேற்ற முதல் சீசனில் வளர்ந்துவரும் வீரருக்கான விருதை பெற்று இவர் அசத்தியிருந்தார்.

Padikkal 3

- Advertisement -

பெங்களூரு அணியில் டிவில்லியர்ஸ், கோலி ஆகியோரைத் தவிர பேட்டிங்கில் வேறு யாரும் இல்லை என்று பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அந்த அணிக்கு கிடைத்த அற்புதமான ஓப்பனராக தேவ்தத் படிக்கல் பெங்களூர் அணியில் விளையாடி வருகிறார். 20 வயதான அவர் இந்த தொடரில் 15 போட்டிகளில் விளையாடி ஐந்து அரை சதங்கள் உட்பட 473 ரன்களை குவித்தார்.

இதன்மூலம் அறிமுக தொடரிலேயே அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இளம் வீரரான இவர் அசாத்தியமான சிக்சர்கள் அடிப்பதிலும், பவுண்டரிகள் அடிப்பதிலும் வல்லவராக இருக்கிறார். ஏற்கனவே பேட்ஸ்மேன்கள் இன்றி தவிக்கும் பெங்களூர் அணிக்கு தற்போது இவர் கிடைத்திருப்பது ஒரு பலம் என்றே கூறலாம். இனிவரும் சீசன்களில் இவரது ஆட்டம் இன்னும் பலமடங்கு வலுவடையும் என்று அனைவரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கிரிக்கெட்டில் தனக்கு யார் ரோல்மாடல் என்பது குறித்து படிக்கல் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய கிரிக்கெட் அணியின் ஓபனராக விளையாடிய கௌதம் கம்பீர் தான் என்னுடைய ரோல் மாடல். ஏனெனில் அவர் அணி இக்கட்டான நேரத்தில் சிக்கி இருக்கும்போது அவரது ஆட்டம் மிக நேர்த்தியாகவும், அற்புதமாகவும் இருக்கும். சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுப்பார்.

gambhir1

அதனால் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை போன்றே பிரஷரான சூழ்நிலைகளில் அணிக்காக விளையாடி ரன்களை சேர்க்க விரும்புகிறேன். நிச்சயம் அவரைப் போல் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கையில் நான் விளையாடி வருகிறேன் என தேவ்தத் படிக்கல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement