பகலிரவு டெஸ்ட் போட்டியை இவர் டி20 போல அதிரடியாக ஆடுவார் – வங்கதேச பயிற்சியாளர் பேட்டி

Vettori
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கொல்கத்தா மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது. இந்த போட்டி தற்போது வரலாற்று சிறப்புமிக்க போட்டியாக மாற இருக்கிறது அதற்கு முதல் காரணம் யாதெனில் இந்திய அணி பங்கேற்கும், இந்தியாவில் நடைபெறும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி இதுவாகும்.

- Advertisement -

இந்தப் போட்டி குறித்த பல்வேறு சுவாரஸ்யமான விடயங்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த போட்டி குறித்து வங்கதேச அணியின் சுழற்பந்து பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்த பகல் இரவு டெஸ்ட் போட்டி முற்றிலும் ஒரு நாள் அல்லது டி20 போட்டி போல அமைய வாய்ப்புள்ளது.

ஏனெனில் மைதானம் முழுவதும் ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தால் சூழ்ந்திருக்கும் எனவே இந்திய வீரர்கள் எங்கிருந்தாலும் மைதானத்தில் உள்ள அனைத்து ரசிகர்களும் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நடந்து கொள்வார்கள். மேலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பேட்டிங் செய்ய வரும்போது டி20 போட்டியில் மைதான சூழ்நிலை எவ்வாறு உள்ளதோ அந்த அளவு அவர் ரசிகர்களால் வரவேற்கப்பட்டு களமிறங்குவார் என்று தெரிகிறது.

Kohli 4

அப்படி அவர் இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு மத்தியில் மார்கிஸ்ச்சியாக விளையாடும் பொழுது நிச்சயம் அவர் வேகமாக விளையாட முயற்சிப்பார். மேலும் அதனால் இந்த டெஸ்ட் போட்டி அவருக்கு சிறப்பாக அமைய அதிக வாய்ப்பு உள்ளது. இரு அணி வீரர்களும் களமிறங்கிய பின்னர் சூழ்நிலை முற்றிலும் மாறும். எந்த ஒரு வீரரும் இந்த டெஸ்ட் போட்டியில் முன்னெப்போதும் விளையாடாத அனுபவத்தை இந்தப் போட்டியில் பெருமளவிற்கு சூழல் ஏற்படும் என்று அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement