CSK vs DC : டெல்லி அணியின் தடுமாற்றம் முதல் ஓவரிலேயே தெரிந்தது – விவரம் இதோ

ஐபிஎல் தொடரின் குவாலிபயர் 2 போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமை

Watson-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் குவாலிபயர் 2 போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார் சென்னை அணியின் கேப்டன் தோனி. அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 38 ரன்களை குவித்தார் முன்ரோ 27 ரன்களை குவித்தார். சென்னை அணியின் சார்பாக பிராவோ சிறப்பாக பந்து வீசி 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

- Advertisement -

பிறகு 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பாக டுபிளிசிஸ், வாட்சன் ஆகியோர் சதம் அடித்து அரைசதம் அடித்தனர். டுபிளிசிஸ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

இந்த போட்டியில் குறைந்த ரன்களை இலக்காக நிர்ணயித்த விட்டு பிறகு பந்து வீச தொடங்கியது. டெல்லி அணி அனுபவ உண்மையை முதல் ஓவரிலேயே காண்பித்தது. முதல் ஓவரை வீசிய போல்ட் மூன்றாவது பந்தை வீச அந்த பந்தை டுபிளிசிஸ் அடித்தார். அந்தப் பந்து கவர் திசையை நோக்கி சென்றதும் டுப்ளிஸிஸ் ரன் ஓட முற்பட்டார். அதனால் எதிர்முனையில் இருந்த வாட்சனும் ரன் ஓட முற்பட்டு குழப்பத்தில் பாதியில் இருந்தனர்.

- Advertisement -

அப்போது அந்த பந்தை பிடித்த அக்சர் பட்டேல் டுபிளிசிஸ் இருந்த முனையை நோக்கி த்ரோ செய்தார். அந்தப் பந்து ஸ்டம்பில் படாமல் பின்னின்ற பீல்டரின் கைக்குச் சென்றது. அப்போது டுபிளிசிஸ் ஸ்டம்பை விட்டு தூரமாக இருந்தாலும் அந்த பில்டர் டுப்ளிஸிஸ்யை அவுட்டாக நினைக்காமல் வாட்சனை அவுட் ஆக்க வேண்டும் என்று நினைத்து பண்டுக்கு த்ரோ செய்தார்.

அந்தப் பந்தை பண்ட் பிடிக்கவில்லை. இதனால் ரன்கள் எதுவும் இன்றி முதல் ஓவரிலேயே ஒரு விக்கெட்டை வீழ்த்தும் வாய்ப்பை டெல்லி அணியினர் கோட்டைவிட்டனர். ஒருவேளை முதல் ஓவரிலேயே விக்கெட் விழுந்திருந்தால் அடுத்துவரும் வீரர்களுக்கு அது கடினமாக அமைந்திருக்கும் ஆனால் அந்த விக்கட்டில் இருந்து தப்பிய துவக்க வீரர்கள் சிறப்பாக ஆடி சென்னை அணியின் வெற்றிக்கு வித்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement