பிரபல இந்திய பவுலரின் தந்தை மரணம். கருப்பு பட்டை அணிந்து அஞ்சலி செலுத்திய டெல்லி அணி வீரர்கள் – விவரம் இதோ

ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபயர் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது.

dcvsmi

அதிகபட்சமாக இஷான் கிஷன் 30 பந்துகளில் 55 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 38 பந்துகளில் 51 ரன்களையும் குவித்தனர். இறுதிநேரத்தில் களம் புகுந்த ஹர்டிக் பாண்டியா 14 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 37 ரன்களை குவித்து அசத்தினார். அதன் பின்னர் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே அடித்தது.

இதனால் மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி சார்பாக பும்ரா சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 14 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டிரென்ட் போல்ட் இரண்டு ஓவர்கள் வீசி 9 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக பும்ரா தேர்வானார்.

boult

இந்நிலையில் நேற்றைய போட்டியில் டெல்லி அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடியதற்கான காரணம் வெளியாகியுள்ளது. அதன்படி டெல்லி அணியின் பந்து வீச்சாளரும், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவருமான மோகித் சர்மாவின் தந்தை நேற்று மரணமடைந்ததால் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக டெல்லி அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடினார். 32 வயதான மோகித் சர்மா இந்திய அணிக்காக 2013ஆம் ஆண்டு அறிமுகமாகி 26 ஒருநாள் போட்டிகளிலும், 8 டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

- Advertisement -

mohith

அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடர்களிலும் 86 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் டெல்லி அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். அவரது தந்தை இறந்த தகவல் தெரிய வந்ததும் அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து புறப்பட்டு இந்தியா வந்து சடங்கில் பங்கேற்பார் எனவும் டெல்லி அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.